குடமுழுக்கை எதிர்நோக்கும் பரஞ்சோதி ஈசுவரர்!

பரம் பொருளாகிய ஈசுவரன் ஆனந்த சொரூபமாய் எங்கும் நிறைந்திருப்பவன்! உலக உயிர்களைக் காக்கும் பொருட்டு ஈசன் எழுந்தருளி அருள்புரியும் சிவத்தலங்கள் இப்பூவுலகெங்கும் நிறைந்திருக்கின்றன. 
குடமுழுக்கை எதிர்நோக்கும் பரஞ்சோதி ஈசுவரர்!

பரம் பொருளாகிய ஈசுவரன் ஆனந்த சொரூபமாய் எங்கும் நிறைந்திருப்பவன்! உலக உயிர்களைக் காக்கும் பொருட்டு ஈசன் எழுந்தருளி அருள்புரியும் சிவத்தலங்கள் இப்பூவுலகெங்கும் நிறைந்திருக்கின்றன. 
ஆனந்தமே சிவமாய் திகழும் அருள்தலங்கள் பல உண்டு. அவ்வகையில் சிறப்பான ஒரு திருத்தலம், சிவகங்கை மாவட்டம், தஞ்சாக்கூர் அருள்மிகு ஞானாம்பிகை சமேத அருள்தரும் பரஞ்சோதி ஈசுவரர் திருக்கோயில் ஆகும். ஆதியில் வில்வ வன úக்ஷத்திரமாக விளங்கிய இத்தலம், நால்வர் பெருமக்களில் ஒருவரான சுந்தரரால் பாடப்பெற்ற சிறப்பு மிக்க தலம்.
ஆதியில் பிரம்மா, விஷ்ணு, இந்திரன், பராசக்தி, லட்சுமி, சரஸ்வதி, இந்திராணியால் பூசிக்கப்பெற்று, பரஞ்சோதி தரிசனமும் அருளப் பெற்ற புண்ணிய தலமாகும். சீதையை தேடி இலங்கைக்குச் செல்லும் வழியில் ராமன், லட்சுமணன் இத்தலத்திற்கு வந்து இத்தல இறைவனாகிய பரஞ்சோதி ஈசுவரரை வணங்கிச் சென்றதாக ஐதீகம்! அதேபோன்று சீதையை மீட்டுத் திரும்பிய ராமன், மனைவி சீதை, தம்பி லட்சுமணன், அனுமன் ஆகியோருடன் மீண்டும் இத்தலத்திற்கு வந்து இத்தல இறைவன் இறைவியை வழிபட்டுச் சென்றதாக செவி வழி தகவல் ஒன்று தெரிவிக்கிறது. இவர்கள் மட்டுமல்லாது, அகத்தியர், கௌதம முனிவர்களாலும் வழிபடப்பெற்ற பெருமை வாய்ந்தது இத்தலம்.
பிற்காலத்தில் மாறன், தஞ்சன், மாறைவாணன், தஞ்சைவாணன் முதலிய அரசர்களால் போற்றி பூசிக்கப்பட்டு, வேண்டிய வரப்பிரசாதங்களும் கிடைக்கப்பெற்று முக்திபேறும் பெற்றனர் என்றும் அறியப்படுகிறது.
பல பெருமைகள் பெற்ற, பழைமை வாய்ந்த இவ்வாலயம், தஞ்சைவாணன், மாறைவாணன் மன்னர்களின் ஆட்சிக்குப்பின்னர், வழிபாடுகுன்றிய நிலையில் சிதிலமடைந்து பூமிக்குள் புதைந்துபோனது. அதன்பின்னர் எவரும் அறியப்படாமல் இருந்த இந்த ஆலயம் வெகுகாலம் கழித்து இறையருளின்படி, வெளிப்படலாயிற்று. 

1961- ஆம் ஆண்டு, மகான் ஸ்ரீசிவக்குமார மௌனகுரு சுவாமி மற்றும் காஞ்சி மகாபெரியவர் சுவாமிகளின் அபிப்பாயங்களின்படியும் வேதாகம முறைப்படியும் இத்திருக்கோயில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தேறியது.
இப்புண்ணிய தலத்தில் புதியதாக ஐந்து நிலை ராஜகோபுரம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முன்மண்டபம், விநாயகர், சுப்ரமணியன், விஷ்ணு, மகாலட்சுமி, சுவர்ணாகர்ஷண பைரவர், நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன் ஆகியோருக்கு புதிதாக சந்நிதிகள் அமைக்கவும் ஏற்பாடாகிவுள்ளது. முக்கியமாக, பரஞ்சோதி ஈசுவரர் கருவறை கோபுரம் கல் திருப்பணி நடைபெறுவதுடன் உற்சவர், நடராஜர், ஞானாம்பிகை , தட்சிணாமூர்த்தி சந்நிதிகளும் புனரமைக்கப்படுகின்றன. ராஜகோபுர திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 
சிவனடியார்கள், பக்தர்கள், பொதுமக்கள், பெரியோர்களின் அருள்பணியினால் திருப்பணிகள் செவ்வனே நிறைவேறி விரைவில் குடமுழுக்கும் நடந்தேறும் வகையில் இப்புண்ணிய திருப்பணியில் பக்தர்கள் பங்குகொண்டு பரஞ்சோதி ஈசுவரரின் பேரருளைப் பெறலாம். 
மதுரை - ராமேஸ்வரம் செல்லும் வழியில் திருப்பாசேத்தியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் தஞ்சாக்கூர் ஆலயத்தை அடையலாம்.
தொடர்புக்கு: 99449 40477/ 96294 99966.
- மோகனா
உங்கள் பகுதியிலுள்ள கோயிலில் திருப்பணி நடைபெறுகிறதா?"வெள்ளிமணி' பகுதிக்குத் தகவல் அளிக்கலாம்.
முகவரி: தினமணி வெள்ளிமணி, எக்ஸ்பிரஸ் கார்டன், 
29, இரண்டாவது பிரதான சாலை, 
அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை - 58.
vellimani@dinamani.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com