இயேசுவை வளர்த்த யோசேப்பு! 

வேதாகமத்தில் யோசேப்பு எனப் பெயர் பெற்ற இருவரின் வரலாறு காணப்படுகிறது.
இயேசுவை வளர்த்த யோசேப்பு! 


வேதாகமத்தில் யோசேப்பு எனப் பெயர் பெற்ற இருவரின் வரலாறு காணப்படுகிறது. அதில், யாக்கோபு என்பவரின் மகனான யோசேப்பு தம் சகோதரர்களால் கொடுமைப்படுத்தப்பட்டு எகிப்துக்கு அடிமையாக விற்கப்பட்டவர். 

அடிமையாக இருந்த நிலையிலும் தெய்வ பக்தியாலும், உண்மையாலும், ஒழுக்கத்தினாலும் உயர்ந்தவராக விளங்கினார். 
ஒருமுறை எகிப்தில் ஏற்பட்ட பஞ்சத்தின்போது, அங்கிருந்த மக்களை ஏழு ஆண்டுகள் காப்பாற்றினார். இதனால் அரசனுக்கு அடுத்த உயர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது என வரலாற்றில் இவர் பெயர் மேன்மையாகக் குறிப்பிடப்
பட்டுள்ளது. 
யோசேப்பு என்றால் வளமை, வளனார் என்று பொருள்படும்.
புதிய ஏற்பாட்டில் மரியாளுக்கு கணவராக நியமிக்கப்பட்டவர் இவர். அன்பு, இரக்கம், பணிவு, தெய்வபக்தி, நம்பிக்கையைக் கைவிடாத தன்மை, தியாகம் உள்ளிட்டவை இவரின் சிறப்பு. 
இவர் வம்சம் ராஜவம்சம் ஆனாலும், தாம் தெரிந்துகொண்ட தச்சுத் தொழிலை உண்மையாகப் போற்றி செய்து வந்தார். வருமானம் குறைவாக இருந்தாலும் பெருமையுடன் வாழ்ந்தார். 
தமக்கு மனைவியாக நியமித்துள்ள மரியாளை பெருமையுடன் ஏற்றுக்கொண்டார். இறையருளால் அவர் கர்ப்பவதி என்று இறைவனால் அறிவுறுத்தப்பட்டபோது, கடவுளுக்கு கீழ்படிந்து ஏற்றுக்கொண்டார். 
மக்கள்தொகை கணக்கு பதிவு செய்ய தம் சொந்த ஊரான பெத்லஹேமுக்கு மரியாளை அழைத்துச் சென்றார். கர்ப்பவதியான அவரை கழுதை மேல் ஏற்றி விட்டு, இவர் கூடவே நடந்து வந்தார். 
பிள்ளைப் பேறு காலம் வந்தது. இடம் தேடினார். சத்திரத்தில் இடம் இல்லாமல் மாட்டுத்தொழுவத்தில் இடம் வாங்கிக் கொடுத்தார் (லூக்கா 2: 4-7). 
யோசேப்பு மரியாளிடம் மிகப் பரிவாக இருந்தார். பிறந்த குழந்தை தேவ குமாரன் இயேசு என அறிந்து ஏரோது மன்னன் அப்பிள்ளையைக் கொன்றுவிட ஆணை பிறப்பித்திருந்தார்.
எனவே பிள்ளையைப் பாதுகாக்கும்படி கனவில் தேவதூதனால் எச்சரிக்கப் பட்டார். உடனே, இரவோடு இரவாக மனைவியையும், குழந்தை இயேசுவையும் எகிப்து நாட்டிலுள்ள நாசரேத் எனும் நகருக்கு அழைத்துச் சென்று, அங்கு வாழ்ந்து வந்தார்கள். 
யோசேப்பு, தமது தொழிலான தச்சுத் தொழிலை இயேசுவுக்கும் கற்றுத் தந்தார். தமது பணி நிறைவுற்ற பொழுது இவர் மரித்துப் போனார். தெய்வச் சிறப்புள்ள அன்னை மரியாளை கன்னியாகவே போற்றி வாழ்ந்து மறைந்தார். வரலாற்றில் இன்றும் யோசேப்பு என்ற பெயர் போற்றப்படுகிறது! உண்மையாக வாழ்வோம், இறையருளைப் பெறுவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com