ஆலயங்கள் ... அற்புதங்கள்...

கோவை மாவட்டம் வடவள்ளியில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. கோவை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
ஆலயங்கள் ... அற்புதங்கள்...

ஏழு குரு கோயில்

சிவ குரு, விஷ்ணு குரு, பிரம்மகுரு, சக்தி குரு, தேவ குரு, ஞானகுரு, அசுர குரு ஆகிய ஏழு குருவும் ஒரே இடத்தில் காட்சியளிக்கும் இடம் உத்தமர் கோவிலில் உள்ள புருஷோத்தமன் கோயில். திருச்சியிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. 

பஞ்சமுக ஆஞ்சநேயர்

கோவை மாவட்டம் வடவள்ளியில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. கோவை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

சஞ்சீவி ஆஞ்சநேயர்

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலுக்கு அருகில் முக்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் தூணில் உள்ள ஆஞ்சநேயர் சந்நிதி விசேஷமானது. ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையுடன் காட்சியளிக்கிறார்.

திருமணக்கோலத்தில்... 

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மூலவர் லிங்க வடிவமாகவும், அவரது பின்புறம் சுவாமியும் அம்பாளும் திருமணக்கோலத்தில் சிலை வடிவிலும் உள்ளனர். இங்குள்ள நவகிரகங்கள் ஒரே திசை நோக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன.   

மனித முக விநாயகர்

திலதர்ப்பணபுரி கோயில் ஆதி விநாயகர் மனித முகம் கொண்டவர். மயிலாடுதுறையிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com