சைவத் திருமுறை அறிவோம்!

திருமுறை என்பது  மாறாத செல்வம் நல்கும் நூலேயாம்

திருமுறை என்பது  மாறாத செல்வம் நல்கும் நூலேயாம்

 அதுவே சைவர்களின் வேதமாம்
 அவைதானே தோத்திரமாம்
 சைவ திருமுறைகள் பன்னிரண்டாம்
 திருவைந்தெழுத்தின் பெருமையினையும் விளக்குவதாம்
 முதல் மூன்று திருமுறைகள் 4158 பாடல்களாம்
 திருஞான சம்பந்தர் அருளியதாம்
 4, 5, 6 திருமுறைகள் 3066 பாடல்களாம்
 திருநாவுக்கரசர் அருளியதாம்
 7-ஆம் திருமுறை 1026 பாடல்களாம்
 சுந்தரமூர்த்தி அருளியதாம்
 8-ஆம் திருமுறை திருவாசகம் மற்றும் திருக் கோவையாராம்
 திருவாசகம் 656 பாடல்களாம்
 திருக்கோவையார் 400 பாடல்களாம்
 மாணிக்கவாசகர் அருளியதாம்
 9-ஆம் திருமுறை திருவிசைப்பா, திருப்பல் லாண்டாம்
 301 பாடல்களாம் 10 அடிகளார் அருளியதாம்
 10-ஆம் திருமுறை திருமந்திரமாம்
 3000 பாடல்களாம் திருமூலர் அருளியதாம்
 11-ஆம் திருமுறை 1405 பாடல்களாம்
 பட்டினத்தார், காரைக்கால் அம்மையார்
 சேரமான் பெருமாள்நாயனார், நம்பியாண்டார் நம்பி ஆகியோர் அடங்கிய 12 அடிகளார் அருளியதாம்
 12-ஆம் திருமுறை பெரிய புராணமாம்
 4286 பாடல்களாம் சேக்கிழார் அருளியதாம்
 பன்னிரு திருமுறைகள் படிப்போம்
 சிவன் அருள் பெற்று பேரின்பம் பெறுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com