தேவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துவோம்

நமக்கு ஒரு கஷ்டம், நோய் உள்ளிட்டவை வரும்போது தேவனை நோக்கி கூப்பிடுவோம். அந்த கஷ்டம் தீர்ந்த பின்னர் இறைவனைத் தேடுவதை நிறுத்திவிடுகிறோம். இது மனிதனின் இயல்பாகவே உள்ளது. 
தேவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துவோம்

நமக்கு ஒரு கஷ்டம், நோய் உள்ளிட்டவை வரும்போது தேவனை நோக்கி கூப்பிடுவோம். அந்த கஷ்டம் தீர்ந்த பின்னர் இறைவனைத் தேடுவதை நிறுத்திவிடுகிறோம். இது மனிதனின் இயல்பாகவே உள்ளது. 
"கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்' என தாவீது (சங்கீதம் 34 : 1-இல்) கூறுகிறார். அதுபோல எந்த சூழ்நிலையாக இருந்தாலும், தேவனை நாம் துதிப்பது, தேவனை மகிமைப்படுத்துவதை விட்டுவிடக்கூடாது.   
இயேசு ஒருமுறை எருசலேமுக்கு செல்கையில் அவர் சமாரியா மற்றும் கலிலேயா நாடுகள் வழியாக நடந்து சென்றார். அப்போது அவர் ஒரு கிராமத்துக்குள் பிரவேசித்தார். இவர், நோய்களை குணமாக்குவார் எனக் கேள்விப்பட்ட, அந்த ஊரில் இருந்த குஷ்டரோகிகள் 10 பேர் இயேசுவிடம் வந்தனர். 
அவர்கள் இயேசுவை நெருங்காமல், தூரத்தில் நின்றுகொண்டு ""இயேசுவே! எங்களுக்கு இரங்கும்'' என சத்தமாகக் கூறினர். ஏனென்றால் அந்தக் காலத்தில் குஷ்டரோகிகளை ஊருக்கு புறம்பாக வைத்துவிடுவது வழக்கம். ஏனென்றால் அவர்கள் ஊருக்குள் வந்தால், மற்றவர்களுக்கு குஷ்டரோகம் வந்துவிடும் என்பதால் அவ்வாறு செய்தனர். இதனால், அவர்கள் இயேசுவுக்கு அருகே வராமல் தூரத்தில் நின்று இயேசுவிடம் முறையிட்டனர். 
இயேசு அந்த பத்துபேரையும் பார்த்து ""நீங்கள் போய் உங்களை ஆசாரியரிடம் காட்டுங்கள்'' என்று கூறினார். 
அவர்கள் விசுவாசத்துடன் சென்றுகொண்டிருக்கும்போதே அவர்களின் குஷ்டரோகம் குணமானது. இதைப்பார்த்த அவர்கள் மிகுந்த சந்தோஷமடைந்தனர். ஆனால், அதில் ஒருவர் மட்டும் இயேசுவிடம் திரும்பி வந்து அவரின் பாதத்தருகே விழுந்து வணங்கி, நன்றி செலுத்தினார். 
இதைப்பார்த்த இயேசு, குணமான பத்து பேரில் ஒருவர் மட்டும் வந்துள்ளதை அறிந்து, ""நீ எழுந்து போ, உன் விசுவாசம் உன்னை ரட்சித்தது'' என்றார். 
நாம் எவ்வாறு இருக்க வேண்டும்...? குணமான மற்ற 9 பேரின் குணம் நம்மிடம் இருக்கக் கூடாது. திரும்பி வந்து இயேசுவுக்கு நன்றி கூறிய மனிதனைப் போல நாம் இருக்கவேண்டும். அவ்வாறு, தேவனிடம் பெற்ற நன்மைகளுக்காக எப்பொழுதும் நன்றி உள்ளவர்களாக இருக்கும்போது, தேவன் நம்மை மென்மேலும் ஆசீர்வதிப்பார்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com