ஆன்மிக மலர்கள்

திருவானைக்காவல் திருத்தலத்தில் பங்குனி மாதம் நடைபெறும் பஞ்ச பிரகார திருவிழாவில் இறைவன் பெண் வேடத்திலும் இறைவி ஆண்வேடத்திலும் திருவீதியுலா வருகிறார்கள்.
klm19siva_1902chn_47_6
klm19siva_1902chn_47_6

திருவானைக்காவல் திருத்தலத்தில் பங்குனி மாதம் நடைபெறும் பஞ்ச பிரகார திருவிழாவில் இறைவன் பெண் வேடத்திலும் இறைவி ஆண்வேடத்திலும் திருவீதியுலா வருகிறார்கள்.

துர்க்கை திருமேனிகளில் மிகவும் பெரியதாகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினியம்மன் மாமல்லபுரத்தில் அருள்பாலிக்கிறாள். 

பஞ்சமுக விநாயகராக கணபதி திருக்கோலம் கொள்ளும்போது அவருக்கு வாகனமாக சிங்கம் அமைகிறது.

- கே. பிரபாவதி

விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் 15 கி.மீ. தொலைவில் மாம்பழப்பட்டு என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து பிரியும் சாலையில் 1 கி.மீ. தூரம் சென்றால் விஸ்வரூப காட்சி தரும் சனீஸ்வரபகவான் ஆலயம் அமைந்துள்ளது. 21 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தரும் இந்த சனீஸ்வரர், தனது இடது காலை தரையில் வைத்தும், வலது காலை தன்னுடைய வாகனமான காகத்தின் மீது ஊன்றியபடியும் காட்சி தருகிறார்.

- பி.கோபி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com