இயேசுவுக்கு ஒசன்னா பாடிய குருத்தோலை ஞாயிறு

பெத்தானியா ஒரு கிராமம். எருசலேம் பட்டணத்துக்கு வெகு அருகாமையில் இருந்தது. இயேசு தாம் சிலுவையில் அறைப்படுவதற்கு ஆறு நாளைக்கு முன்பாக இவ்வூருக்கு வந்தார். இவ்வூரில் மார்த்தாள், மரியாள், லாசுரு இருந்தனர்

பெத்தானியா ஒரு கிராமம். எருசலேம் பட்டணத்துக்கு வெகு அருகாமையில் இருந்தது. இயேசு தாம் சிலுவையில் அறைப்படுவதற்கு ஆறு நாளைக்கு முன்பாக இவ்வூருக்கு வந்தார். இவ்வூரில் மார்த்தாள், மரியாள், லாசுரு இருந்தனர். 
இயேசு வந்திருக்கின்றார் என்ற செய்தியை கேள்விப்பட்டவர்கள், இயேசுவைக் காணும்படி திரளாக வந்தனர். இவ்வூரில்தான் மரித்த லாசுருவை நான்கு நாள்களுக்கு முன்பு உயிரோடு கல்லறையிலிருந்து எழுப்பினார் என்ற செய்தி மக்களை இயேசுவிடம் ஈர்க்கச் செய்தது. அதுமட்டுமல்ல உயிரோடு மரித்து  பின்பு உயிர்த்தெழுந்த லாசுருவையும் காண வந்தார்கள். 
பஸ்கா பண்டிகை ஆறு நாள்களுக்குப்பிறகு இருந்ததால் இயேசுவுக்கு விருந்து ஆயத்தப்
படுத்தி மக்கள் மகிழ்ந்தார்கள். ஆசாரியர்களும் தேவ அறிஞர்களும் இயேசுவின் புகழ் கண்டு அவரை கொலைச் செய்ய வகை தேடினார்கள். மறுநாள் காலையில் இயேசு எருசலேம் ஆலயத்துக்குப் போக ஆயத்தமானார்கள்.
எருசலேமில் இயேசு ஆண்டவர் பாவிகளின் கையில் ஒப்பு கொடுக்கப்பட்டு கொலை செய்யப்போகிறார்கள் என்பது இயேசுவுக்கு தெரிந்திருந்தது. ஆனாலும் இயேசு சிலுவையில் அறையப்படவும், மரணம் அடையவும், பாவ நிவாரண பலியாக பலியாகவும்  தம் பரிசுத்த ரத்தத்தைச் சிந்த ஆயத்தமாக இருந்தார். 
இயேசு தம் சீடரிடத்தில், ""உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குச் செல்லுங்கள். அங்கே சென்றவுடன் ஒரு கழுதையையும் அதன் ஒரு குட்டியையும் கட்டியிருக்க காண்பீர்கள். அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டு வாருங்கள்'' என்றார். அப்படியே கண்டு கழுதையையும் அதன் குட்டியையும் கொண்டு வந்தார்கள். 
""இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராக, கழுதையின் மேலும் கழுதை குட்டியாகிய மறியின் மேல் ஏறிக்கொண்டு உன்னிடத்தில் வருகிறார் என்று சொல்லுங்கள்'' (மத்தேயு 21: 4) என்று தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டப்படியே மக்கள் கூட்டமாய் கூடி இயேசுவை கழுதையின் மேல் அமரச் செய்து மலர்களாலும் இலைகளாலும் தங்கள் உடைகளை தரையில் விரித்து வழிநெடுகிலும் வரவேற்றார்கள். லாசுருவை நான்கு நாள்களுக்குப்பிறகு உயிரோடு எழுப்பியவரைப் பார்க்க மக்கள் ஆர்ப்பரித்து  ஆடிப்பாடியும் தங்கள் கைகளில் குருத்தோலையை பிடித்து மிகவும் மகிழ்ச்சியுடன் தேவனைப் பாடிப் புகழ்ந்தார்கள். 
முன் நடப்பாடும் பின் நடப்பாடும் தாவீதின் குமாரனுக்கு ஒசன்னா கர்த்தரின் நாமத்தில் வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர் உன்னிடத்திலே ஒசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். யார் இவர் என்று எல்லோரும் விசாரித்தார்கள். இவர்தான் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து அவனை உயிரோடே எழுப்பினாரென்று சாட்சி கொடுத்தார்கள். 
அன்று, எருசலேம் விழாக் கோலம் கொண்டது. தங்களை அடிமைத் தனத்திலிருந்து விடுதலை தர, ராஜா வந்து விட்டார் என மகிழ்ந்தனர். ஆனால் ஆறு நாள்களுக்குப்பின்பு ஆசாரியர்களாலும் யூதர்களாலும் சிலுவையில் அறையப்பட்டார்கள். இயேசு ஆண்டவர் நம்மை மீட்க தாமே எருசலேம் வந்து சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்தார். 
இயேசுவின் தியாகம், தாழ்மை, அற்பணிப்பு, சிலுவையில் அறைப்பட ஒப்புக்கொடுத்தலைப் போற்றுவோம். ஒசன்னா பாடி மகிழ்வோம். இன்றும் ஒசன்னா பாடி நம் இருதயத்தில் ஏற்றுக் கொள்வோம். 

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com