நிகழ்வுகள்

தூய மந்திர ஓசைகளால் செய்யப்பெறும் மகா சிவவேள்வி சுடராகச் சிவபெருமான் விளங்குவதை நம் வேதம், ஆகமம், சாத்திர தோத்திரம் யாவும் தெரிவிக்கின்றன.

மகா சிவராத்திரி விழா
தூய மந்திர ஓசைகளால் செய்யப்பெறும் மகா சிவவேள்வி சுடராகச் சிவபெருமான் விளங்குவதை நம் வேதம், ஆகமம், சாத்திர தோத்திரம் யாவும் தெரிவிக்கின்றன. அவ்வண்ணம், திருவாசகம் முற்றோதல் சிவ வேள்வி நடைபெறுகிறது. வேலூர் மாவட்டம், வெட்டுவாணம் ஸ்ரீ அறுபத்து மூவர் சமரச சன்மார்க்க சபை சார்பில் மகாசிவராத்திரி 31- ஆம் ஆண்டு விழாவில் மகா சிவ வேள்வி, 21.02.2020, வெள்ளிக்கிழமை, மாலை 5.00 மணிக்கு தொடங்கி இரவு முழுவதும் நடைபெறுகின்றது.
மாசி பெருவிழா
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் அருள்மிகு அங்காளபரமேஸ்வரிக்கு மாசி பெருவிழா, 22.02.2020 முதல் 05.03.2020 வரை 13 நாள்களுக்கு நடைபெறுகின்றது. பிப்ரவரி 23 -மயானக்கொள்ளை, பிப்ரவரி 26 - தீமிதி விழா, பிப்ரவரி 28- திருத்தேர் வடம் பிடித்தல். 
தொடர்புக்கு: 04145 234229 / 234291.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com