பொன்மொழிகள்!

கல்வியில் நமக்குத் துணையாக நிற்பது சத்சங்கமே!  அதாவது, தெய்வபக்தியும், நேர்மையும், உள்ளத்தூய்மையும் கொண்டு விளங்கும் நல்லவர்களின் நட்பே ஆகும்.
பொன்மொழிகள்!

கல்வியில் நமக்குத் துணையாக நிற்பது சத்சங்கமே! அதாவது, தெய்வபக்தியும், நேர்மையும், உள்ளத்தூய்மையும் கொண்டு விளங்கும் நல்லவர்களின் நட்பே ஆகும்.

"தெய்விகக் குணங்கள் உடைய உயர்ந்த உத்தமர்களின் நட்பையும், ஆசியையும் பெற்றவன், பிறவி என்ற பெருங்கடலின் பாதியை எளிதில் கடந்துவிட்டான்' என்று கொள்ளலாம்!

- சமர்த்த ராமதாசர் (சத்ரபதி சிவாஜியின் குரு)

கணவரின் பெருமையும் மகிழ்ச்சியும், மனைவியின் அன்பிலும் கற்பிலும்தான் இருக்கின்றன. கணவரின் குலத்தை விருத்தி செய்பவள் மனைவியே! முன்னோர்கள் நற்கதி அடைவதற்கு சத்புத்திரனை அளிப்பவளும் மனைவிதான். ஆதலால், ஒருவர் தனது வாழ்க்கையில் உயர்வதும், தாழ்வதும் மனைவியின் குணங்களில்தான் இருக்கின்றது.

- மகரிஷி காஸ்யபர்
தனது பத்தினி திதிக்கு அருளிய உபதேசம்

மோட்சத்தையும், நல்ல பிறவியையும் பெற்றுத்தரும் தானங்கள் பல இருக்கின்றன. கோ தானம், பூமி தானம், தீப தானம், வஸ்திர தானம், அன்னதானம், ஸ்வர்ண தானம் என்று ஒவ்வொரு தானத்திற்கும் ஒவ்வொரு புண்ணிய பலன் உண்டு.

- தர்ம சாஸ்திரம்


நிகழ்வுகள்


திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா

வேலூர் மாவட்டம், வெட்டுவானம், திரு.வி.க. சாலை, ஸ்ரீ அறுபத்துமூவர் சமரச சன்மார்க்க சபை சார்பில் திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா, 19.01.2020, மாலை 5.30 மணிக்கு சிறப்பு போற்றுதல் திருமுறை இன்னிசையுடன் நடைபெறுகின்றது.

தொடர்புக்கு: 04171 244348.

மணியோசை

வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் திருத்தலத்தின் பெருமைகளை சொல்லும் எஸ்.எஸ். சீதாராமனின் கட்டுரை போற்றுதற்குரியது. "சிதம்பரம் நடராஜர் மந்திர்' பூனே அருகில் சதாராவில் அமைந்துள்ளது குறித்து அறிந்து மகிழ்ந்தேன். நன்றி!

- ரேவதி சம்பத்குமார், ஈரோடு


"பொன்மொழிகள்' பகுதியில் துளசிதாசரின் "பக்தியில்லாதவன் நீரில்லாத மேகம் போன்றவன்' என்ற வரிகள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை! சதாராவில் உள்ள சிதம்பரம் நடராஜர் ஆலயம் பற்றி அறிந்து பரவசப்பட்டோம்! வாழ்த்துகள்!

- ப. அண்ணாமலை, ஒட்டன்சத்திரம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com