பலன் தரும் பரிகாரத் தலங்கள்

கும்பகோணம் அருகிலுள்ள திருக்கருகாவூர் கர்ப்ப ரக்ஷாம்பிகை கோயிலில் சுயம்பு சிவபெருமான் சந்நிதி உள்ளது. இக்கோயிலில் அம்மனுக்கு விசேஷ பூஜைகள் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். 
பலன் தரும் பரிகாரத் தலங்கள்


கும்பகோணம் அருகிலுள்ள திருக்கருகாவூர் கர்ப்ப ரக்ஷாம்பிகை கோயிலில் சுயம்பு சிவபெருமான் சந்நிதி உள்ளது. இக்கோயிலில் அம்மனுக்கு விசேஷ பூஜைகள் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். 

ராமநாதபுரம் ராஜ மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு விசேஷ பூஜைகள் செய்தால் குழந்தைகளின் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

சென்னை மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் ஊசி மேல் தவம் செய்வது போல் காட்சி தரும் அழகிய உற்சவராக அம்மனை இங்கு காணலாம். இந்த அம்மனிடம் பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் மற்றும் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

சென்னை திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் அம்மனிடம் பிரார்த்தனை செய்பவர்களுக்கு நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு வேண்டி விசேஷ பூஜைகள் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று பக்தர்கள் கருதுகின்றனர்.

திருவாரூர் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது மடப்புரம். இங்கு குரு தட்சிணாமூர்த்தி சமாதி உள்ளது. இந்த சமாதியின் மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பதவி உயர்வு பெறவும், நினைத்த காரியம் நிறைவேறவும் வியாழக்கிழமைகளில் இரவில் தங்கி வழிபாடு செய்கின்றனர். 

மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குப் போகும் வழியில் உள்ளது வெயிலுகந்த அம்மன் கோயில். பக்தர்கள் வயிறு சம்பந்தமான நோய்கள் தீர இங்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ளது தாத்தையங்கார்பேட்டை. இங்குள்ள சிவன் கோயிலில் அபூர்வமான பஞ்சமுக பைரவர் சந்நிதி உள்ளது. கடன் பிரச்னை தீர இங்கு அஷ்டமி நாளில் சிறப்பு வழிபாடுகளைச் செய்கின்றனர். 

சென்னை அடையாறு பேருந்து நிலையம் அருகில் உள்ளது ஸ்ரீஅனந்த பத்மநாபசுவாமி கோயில். இக்கோயில் மூலவர் திருவனந்தபுரத்தில் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீஅனந்த பத்மநாப சுவாமியைப் போன்று மூன்று பாகங்களாகப் பார்த்து வணங்குவது போல் இங்கும் காட்சி தருகிறார். வியாபாரத்தில் வெற்றியடைய இங்கு வழிபாடு செய்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com