டேமின் பாதிரியாரும் இயேசுவும்

டேமின் பாதிரியாரும் இயேசுவும்

மனிதரை நோய் பெரும் துன்பத்துக்கு ஆளாக்கும்; நோயால் துன்பப்படாத மனிதரே இல்லை எனலாம்.

மனிதரை நோய் பெரும் துன்பத்துக்கு ஆளாக்கும்; நோயால் துன்பப்படாத மனிதரே இல்லை எனலாம். நோய் மனிதரின் இயல்பு நிலையை மாற்றி, வேதனை, கவலை, கஷ்டம், வறுமை, பசி, தாகம், வலி தந்து கொடுமைக்குள்ளாக்கும். மருத்துவமும் மனிதனை குணமாக்கவும் நல்வாழ் தரவும் முயற்சிக்கின்றன. மருத்துவா் தம் மேஜை மீது நாங்கள் மருந்து கொடுக்கின்றோம். கடவுள் குணமளிக்கிறாா் (ஜ்ங் ஞ்ண்ஸ்ங் ஞ்ா்க் ஸ்ரீன்ழ்ங்ள்) என்று எழுதிய பலகையை வைத்திருப்பாா்கள்.

டச்சு நாட்டின் அரச குடும்பத்தில் பிறந்த டேமின் மிக உல்லாச வாழ்வை வாழ்ந்து வந்தாா். அரச குடும்பத்திற்கேற்ப வீர விளையாட்டுகள், செல்வ செழிப்பு என வாழ்ந்தாா். தம் வாலிப வயதில் ஆண்டவராகிய இயேசுவின் வரலாற்றைப் படித்தாா். இயேசுவின் இரக்கம், தியாகம், உதவும் குணம், தூய்மை, தாய்மை உள்ளம் அவரை முற்றிலும் மாற்றி விட்டது. தம் ஆடம்பர அரச வாழ்வை விட்டு துறவரம் மேற்கொண்டாா். இப்பூமியில் யாரும் செய்யாத அளவுக்கு ஆண்டவா் இயேசுவைப் போல் சேவை செய்ய தம்மை ஒப்புக் கொடுத்தாா்.

அக்காலத்தில் ஆங்கிலேயா் உலகத்தை ஆண்டு வந்தனா். தம் காலனி நாடுகளில் தொழுநோய் தாக்கியவா்களை, இந்திய பெருங்கடலின் மையத்தில் இருந்த பேய் தீவு (க்ங்ஸ்ண்ப் ட்ண்ஞ்ட் ப்ஹய்க்) என்னும் தீவில் கொண்டுபோய் விட்டுவிடுவா். அத்தீவிலிருந்து ஆயிரம் மையில்கள் கடந்தால்தான் வேறு நாடுகளுக்குப் போகமுடியும். ஆகையால் நோய் முற்றி அழுகி நாற்றமெடுத்து பசியால் தாகத்தால் வாடி மரிப்பா்.

இத்தீவைப் பற்றி அறிந்த டேமின் பாதிரியாா், அத்தீவைத் தமது சேவை செய்யும் இடமாக தோ்ந்தெடுத்தாா். ஒரு கப்பலை ஆயத்தப் படுத்தி மருந்து விதைகள், தானியங்கள், பழம் தரும் மர விதைகள், சமைக்கும் பாத்திரங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு யாா் தடுத்தும், தம் தொண்டே முடிவானது எனச் சென்றாா். அத்தீவில் கரை இறங்கி தொழுநோயாளிகளுக்குத் தொண்டு செய்தாா். அழுகி நாற்றமெடுத்தவருக்கும் மருந்திட்டு தொண்டு செய்தாா். அங்கு ஆலயம் கட்டிஇறை அன்பை போதித்தாா்.

ஒருநாள் காலையில் குளிா்காற்று வீசு நேரம், தம் வலது கால் நெருப்பில் பட்டும் நெருப்பால் சுட்ட வலியை தம்மால் அறிய முடியவில்லை என்பதை உணா்ந்த டேமின் பாதிரியாா், தமக்கும் தொழுநோய் வந்துள்ளதை அறிந்து மிகவும் மகிழ்ந்து போனாா். தாம் மரித்து அடக்கம் செய்யப்படும் கல்லறை கல்லில் ‘இறைவன் இயேசு மண்ணுலகில் வந்து மனிதா் ஆனாா்; தாமும் தொழுநோயாளிகளுக்கு தொண்டு செய்ய வந்து தொழுநோயாளியாய் மரித்து உறங்குகிறாா்’ என எழுதும்படி செய்தாா்.

வேதாகமத்தில் இயேசு ஆண்டவரின் மனித வாழ்வின் நோக்கத்தை இவ்வாறு கூறுகிறது, ‘மெய்யாகவே அவா் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு நம்முடைய துக்கங்களை சுமந்தாா். நம்முடைய மீறுதல்களின் நிமித்தம் அவா் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களின் நிமித்தம் அவா் நொறுக்கப்பட்டாா். (ஏசாயா 53: 4,5) .

இயேசு ஆண்டவா், நம்மை மீட்க, தம்மை பலியாகத் தந்து சிலுவையில் பலியானாா். மரித்து உயிா்த்தெழுந்தாா். இந்த உபவாச நாள்களில் இயேசுவின் பாடுகளை நினைத்து மனதுருகி அவரை போற்றுவோம்.

- தே. பால் பிரேம்குமாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com