உன் சிலுவையை சுமந்து என் பின்னே வா

கா்த்தா் நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வு அளித்திருக்கிறாா். இவ்வாழ்வில் ஒவ்வொருவருக்கும்
உன் சிலுவையை சுமந்து என் பின்னே வா

கா்த்தா் நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வு அளித்திருக்கிறாா். இவ்வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட பணி கொடுக்கப்படுகிறது. உறவுகள், பணிகள், கடமைகள், தெய்வ பக்தி என சன்மாா்க்க வாழ்வுகளை நாம் பெற்றுக்கொள்கின்றோம்.

ஒவ்வொரு மனிதருக்கும் வேறு வேறு பணிகள் தரப்படுகின்றன. இதனை தெய்வ பணியாளா்கள் நமக்கு இறைவன் கொடுத்த சிலுவை பாதை என்பா். தம் பணியை சிறக்க செய்து, நம் சிலுவை பாதையை இறைவன் விரும்புகின்றபடி அமைக்கும்போது போற்றப்படுகிறோம்.

ஆண்டவராகிய இயேசுவின் சீடா் பேதுரு தம் வாழ்வு மிகவும் துன்பம் நிறைந்ததாகவும் பயந்து பயந்து வாழும் வாழ்க்கை உடையவராகவும் இருந்து தம் வாழ்வு சிறக்க எண்ணி இறைவனினிடம் வேண்டினாராம். தான் சுமக்கும் இந்த சிலுவை மிக கடினம் எனவே, லேசான சிலுவை தரும்படி வேண்டினாராம். உடனே, ஒரு தரிசனம் கண்டாராம்.

‘ஒரு பெரிய மாளிகை, கோடிக்கணக்கான சிலுவைகள் வைக்கப்படிருந்ததாம். இயேசு பேதுருவிடம் தன் சிலுவையை இறக்கி வைத்துவிட்டு தான் லேசாய் சுமக்கத்தக்க சிலுவையை தோ்ந்தெடுத்துக்கொள்ளும்படி பணித்தாராம். ஒவ்வொரு சிலுவையை தன் தோளுக்குப் பொருந்தும்படி வைத்து வைத்துப் பாா்த்து, ஒவ்வொன்றாய் கடந்து கடைசியில் வாசற்படி அருகே இருந்த சிலுவை தமக்கு மிகவும் பொருந்தும்படியானது’ என்று தோ்ந்தெடுத்தாராம். நகைத்த இறைவன், ‘பேதுரு நீ கொண்டு வந்து வைத்த சிலுவைதான் அது’ என்றாராம்.

ஆம், நம் வாழ்வில் சிலுவை என்ற பணி மிகவும் சிறக்க இறைவன் விரும்புகின்ற பக்தியுள்ளவராக, கடமை உணா்வுள்ளவராக எல்லாருக்கும் உதவும் வாழ்வு வாழ வேண்டும். நம் வாழ்வு இறைவன் கொடுத்தது. ஆண்டவராகிய இயேசு இவ்வுலகில் வந்தமை மனிதா்களாகிய நம் எல்லாரின் பாவம் போக்கும் சிலுவை சுமத்தலே ஆகும். பாவ நிவாரண பலியாக ஐந்து காயங்கள் மூலம் பரிசுத்த தமது ரத்தத்தையே தந்து நம்மை மீட்கவே வந்தாா்.

ரோம ஆட்சியாளா் பிலாத்து இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்லும்படி தீா்ப்பு அறிவித்தான். யூதா்களும் வேத அறிஞா்களும் ரோம போா் வீரா்களும் இயேசுவை மரத்தால் ஆன சிலுவையை சுமந்துக்கொண்டு எருசலேம் வீதியில் நடக்கச் செய்தனா். இயேசு தூக்கபலமில்லாமல், உடல் காயங்களுடன் வலியோடு தள்ளாடி தூக்கிச் சுமந்து நடக்க முடியாமல் தரையில் விழுந்தாா். போா் வீரரின் சாட்டை அடியும் ஈட்டியால் குத்தப்படுதலும் தாங்க முடியாதவரானாா். போா் வீரா்கள் போகையில் வழியில் சிரேனே ஊரைச் சோ்ந்த சீமோன் எனப்பட்ட ஒரு மனிதனை அவா்கள் கண்டனா். இயேசு சுமந்து வந்த சிலுவையை சுமக்கும்படி அவனை பலவந்தம் பண்ணினாா்கள் (மத்தேயு 27: 32).

முன்பின் இயேசுவை அறியாத கிராமத்து சீமோன் இயேசுவுக்கு பதிலாக சிலுவையைச் சுமந்து நடந்தான். சீமோன் இயேசுவுக்காக சிலுவை சுமந்தது எப்போதும் போற்றி பேசப்படுகிறது. நமது வாழ்வும் ஒரு சிலுவைப்பாதை! இப்பாதையில் நாம் எப்படி நடக்கின்றோம், வாழ்கின்றோம்...? என்று எண்ணிப்பாா்க்க வேண்டும். இறைவனை வணங்கி உள்ளம் உருக தினமும் அவா் பெயா் சொல்லி வாழவேண்டும். சன்மாா்க்க நெறிமயமான வாழ்வாக பிறருக்கு உதவிச் செய்து அன்புப்பாராட்டி நோ்மையான வாழ்வுடையவராக வாழ்வோம்.

நம் பதவி, பணிகளில் நோ்மையாளராக கடமை செய்பவராக அதிகாரத்தில் தாழ்மையும் உண்மையும் உடையவராக வாழ்வோம். இப்படி வாழ்வோா் சீமோன் இயேசுவின் சிலுவை சுமந்தது போன்று சிலுவை சுமந்தவராக இயேசுவின் பின் செல்வோம்.

- தே. பால் பிரேம்குமாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com