பவிஷ்ய புராணம் கூறும் சூரிய ரகசியம்!

சூரியன் குறித்து பவிஷ்ய புராணம் கூறும் தகவல்கள்: 
பவிஷ்ய புராணம் கூறும் சூரிய ரகசியம்!

சூரியன் குறித்து பவிஷ்ய புராணம் கூறும் தகவல்கள்: 

சூரியனின் பண்புகள் 12 வடிவங்களாகத் திகழ்கின்றன. அவை, பன்னிரண்டு ஆதித்யர்கள் என்று போற்றப்படுகிறது. இந்திரா, ததா, பர்ஜன்யா, புஷா,துவஷ்டா, ஆர்யமா, பகாவை, வஸ்வனா, விஷ்ணு, அம்ஷு, வருணா, மித்ரா என்ற பன்னிரண்டு பெயர்களுடன் விளங்கும் சூரியன், ஒவ்வொரு பெயருக்கு ஏற்ப செயல்படுகிறான் என்கிறது சூரியபுராணம்.

சூரியன் இந்திரன் வடிவத்தில் தேவர்களின் தலைவனாகவும் அவர்களின் அரசனாகவும் விளங்குகிறான். மேலும் "ததா' வாக இருந்து உயிர்கள் பிறக்கக் காரணமாகிறான். "பர்ஜன்யா'னாக இருந்து, மேகங்களுக்கிடையே வாழ்ந்து மழையை பெய்விக்கக் காரணமாகிறான். மேலும், "புஷா'வாக எல்லா தானியங்களுக்குள்ளும் உயிர்ச்சத்தாக விளங்கி, உயிர்களுக்கு சக்தியை வழங்கும் தன்மையை தானியங்களுக்கு உருவாக்குகிறான். அத்துடன் மரம், செடி, கொடிகளுக்கு "துவஷ்டா' என்னும் சக்தியைக் கொடுத்து அவைகளை மேலோங்கி வளரச் செய்கிறான்.

"ஆர்யமா'வாக காற்றில் தூய பிராண வாயுவை உண்டாக்கி உலகில் உயிர்கள் வாழ வழிவகை செய்வதுடன் "பகாவை'யாக பூமியின் மையத்தில் இருந்து எங்கும் பரவி உயிர்களின் உடலில் இயங்கும் சக்தியாகவும் திகழ்கிறான். "வஸ்வனாக' தீயில் இருந்து வெப்பம் உண்டாக்கி, உணவு சமைக்கவும், சிலவற்றை அழிக்கவும் செய்பவன். விஷ்ணுவாக தேவர்களுக்கு எதிரானவர்களை அழிக்கவும் துணை செய்கிறான். 

புயல், சூறாவளி போன்ற கடுமையான காற்றுத் தன்மையின் வீரியத்தைக் குறைத்து உயிர்களுக்கு இதமான மெல்லிய தென்றல் வீச, "அம்ஷு' எனும் சக்தியாகவும் உருக்கொள்கிறான். அத்துடன் "வருண'னாக நீரில் நிறைந்து உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதவனாகத் திகழ்கிறான். இதற்கும் மேலாக, "மித்ரா' வாக, சந்திராபாக் நதிக்கரையில் கோயில் கொண்டு அருள்புரிகிறான். 

சூரியதேவனின் பன்னிரு கூறுகளையும் பற்றி நன்கு அறிந்து வழிபடுபவர்கள், இறுதிக்காலத்தில் இவ்வுலக வாழ்வைத் துறந்தபின், சூரிய தேவனுடன் சூரியலோகத்தில் வாழ்கின்ற பாக்கியத்தைப் பெறுவார்கள் என்று பவிஷ்ய புராணம் கூறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com