பொருநை போற்றுதும் - 138

கட்டபொம்மனிடத்தில், வேறேதேனும் கூற வேண்டுமா என்று தாம் வினவியபோது, ஏதுமில்லை என்று மெüனம் காத்ததை பானர்மென்னே பதிவு செய்துள்ளார்:
பொருநை போற்றுதும் - 138

கட்டபொம்மனிடத்தில், வேறேதேனும் கூற வேண்டுமா என்று தாம் வினவியபோது, ஏதுமில்லை என்று மெüனம் காத்ததை பானர்மென்னே பதிவு செய்துள்ளார்:

"On being asked if he had anything further to say, he replied he had not, with an appearance of the greatest indifference'

கைவிலங்கிடப்பட்ட நிலையிலும், நாட்டின் உரிமையை விட்டுத் தரமுடியாது என்று மறுதலித்த கட்டபொம்மனுக்குத் தூக்குத் தண்டனை விதித்தார் பானர்மென். தண்டனை விதிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாக, கயத்தாறு புளியமரத்தில், பிறரை எட்டியிருக்கச் சொல்லிவிட்டு, தூக்குக் கயிற்றைத் தாமே கழுத்திலிட்டுக் கொண்டு, "கோட்டையைப் பாதுகாத்து, அங்கேயே போரிட்டு, போர்முனையிலேயே இறந்திருந்தால் நாட்டுக்கு நலமாய் இருந்திருக்கும்' என்றுரைத்துக்கொண்டே நின்றிருந்த நாற்காலியை உதைத்துத் தள்ளினார் கட்டபொம்மன். 

1799-ஆம் ஆண்டு, அக்டோபர் 16}ஆம் தேதி மாலை, வீரபாண்டிய கட்டபொம்மன் இறந்து போனார்; ஆங்கிலேயக் கம்பெனியாருக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த கட்டபொம்மன் இறந்துபோனார். பொருநையாளின் பெருமை மிக்க மகன்களில் ஒருவர் இறந்துபோனார். 

அக்டோபர் 17-ஆம் நாள், கயத்தாறு முகாம் அலுவலகத்திலிருந்து கம்பெனி அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பினார் பானர்மென். அந்தக் கடிதத்திலிருந்து.......
கட்டபொம்மன் மரணத்தைச் சுட்டாமல் சுட்டி, அரசின் ஆணைகளைப் பட்டியலிட்டு, பிரகடனம் ஒன்றை பானர்மென்வெளியிட்டார். இதன்படி,

"The manner and behaviour of the polegar….was undaunted and supercilious; …..when he went out to be executed, he walked with a firm and daring air……. that on his way to the place of execution he expressed some anxiety for his dumb brother alone, and said, when he reached the foot of the tree, on which he was hanged, that he then regretted having left his fort, in the defence of which it would have been better for him to have died……'

பாளையக்காரர்கள் யாவரும், தத்தம் ஆயுதங்களைக் கம்பெனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்; பாளையங்களின் வருவாய்-செலவினக் கணக்கு வழக்குகளை உடனடியாகக் கம்பெனியாரிடம் ப்படைக்கவேண்டும்;

மிக முக்கியமாக, பாளையங்களின் கோட்டைகள் அனைத்தையும் இடித்துத் தரைமட்டமாக்க வேண்டும். கோட்டைகளை இடித்துத் தரைமட்டமாக்குவதைப் பாளையக்காரர்கள், தத்தம் ஆட்களைக் கொண்டே செய்வதற்கும் ஆணையிடப்பட்டது. கட்டபொம்மன் இறந்துபட்ட அடுத்த ஐந்து நாள்களுக்கு பானர்மென்னும் பாளையக்காரர்களும் கயத்தாற்றில் இருந்துள்ளனர். அந்த ஐந்து நாள்களிலேயே கோட்டைகள் அனைத்தும் இடிக்கப்பட்டுள்ளன. அதற்கான கட்டளைகளை எடுத்துக் கொண்டு பாளையத்தாரின் ஆட்கள் இரவோடிரவாக அந்தந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். 

பாஞ்சாலங்குறிச்சிப்பாளையமும், ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம், கோலார்பட்டி, காடல்குடி, குளத்தூர் பாளையங்களில் சொத்துகளும் கம்பெனியால் எடுத்துக்கொள்ளப்பட்டன. 

நாகலாபுரம் மற்றும் ஏழாயிரம்பண்ணைப் பாளைய ஜமீன்கள், கைதிகளாகச் சென்னைக்கு அனுப்பப்பட்டனர் (சென்னையிலேயே இவர்கள் பின்னர் இறந்துபோயினர்). "பலவீனமான ஒல்லி இளைஞர்' என்று விவரிக்கப்பட்ட கோலார்பட்டிப் பாளையத்தாரும், "பலவீனமான முதியவர்' என்று விவரிக்கப்பட்ட குளத்தூர் பாளையத்தாரும், ஆபத்தில்லாதவர்கள் என்று கருதப்பட்டு, ராமநாதபுரத்தில் தங்க வைக்கப்பட்டனர். காடல்குடிப் பாளையத்தாரைப் பிடிக்க முடியவில்லை. 

கட்டபொம்மன் இல்லாத நிலையில், இனிமேல் கிளர்ச்சிகள் ஏதும் உண்டாக வாய்ப்பில்லை என்னும் சூழலில், சங்கரநயினார் கோயிலிலும் கயத்தாற்றிலும் சிறு சிறு படைகளை நிறுத்திவிட்டு, பாளையங்கோட்டையை பலப்படுத்திவிட்டு, மேஜர் ட்யூரிங்கிடம் ராணுவ அதிகாரத்தைக் கையமர்த்திவிட்டு நெல்லை வட்டாரத்தைவிட்டே புறப்பட்டார் மேஜர் 
பானர்மென்.

(தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com