பொன்மொழிகள்!

நம் உள்ளத்தில் ஆசைகள், கைத்தாளங்களையும் சதங்கைகளையும் போல் இடைவிடாமல் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. நம் மனம் கலியுகத்திற்கு ஏற்றபடி நடனம் புரிகின்றது. 
பொன்மொழிகள்!

நம் உள்ளத்தில் ஆசைகள், கைத்தாளங்களையும் சதங்கைகளையும் போல் இடைவிடாமல் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. நம் மனம் கலியுகத்திற்கு ஏற்றபடி நடனம் புரிகின்றது. திருப்தி உள்ள மனிதர்கள் நிற்பதற்கு இங்கு எங்கே இடம் இருக்கிறது? 
-குருநானக்

ஒவ்வொரு நாளும் இந்தவாழ்க்கையின் துன்பத்திற்கும் இன்பத்திற்கும், நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான சந்தர்ப்பங்களும் காரணங்களும் உண்டாகின்றன. ஆனால்அவையெல்லாம் அறிவில்லாதவனைத்தான் பாதிக்குமே தவிர, விவேகமுள்ளவனை அணுகாது. 
-மகாபாரதம்

மனிதன், பலவீனம் உள்ளவனாகவும் தீயவனாகவும் இருப்பது தனது இயற்கைத்தன்மை என்று நினைத்துக்கொள்வது பெரும் தவறாகும்.
ஒவ்வொரு மனிதனிடமும் வலிமைமிக்க தெய்வ சக்திகுடிகொண்டிருக்கிறது. அவனுடைய பழக்கவழக்கங்களும் ஆசைகளும் எண்ணங்களும்தான், நலிவுற்றும் தீமை நிறைந்தும் இருக்கின்றன. ஆனால் அவனது ஆத்மா பரிசுத்தமாகவே இருக்கிறது.
-ஸ்ரீ ரமண மகரிஷி

முதலில் இன்பம் தருவது போல் தோன்றி,பிறகு நிச்சயமாகத் துன்பம் தரும் பழக்கவழக்கங்களுக்கு இடம் தராதே. முன் ஜாக்கிரதையாக இருந்து இவற்றுக்கு இடம் கொடுக்காமல்,துன்பம் உன்னைச் சேராமல் செய்துகொள். உதாரணமாக நல்ல உணவுகிடைத்தபோது அதை அளவுக்கு மிஞ்சிப் புசித்துப் பின்பு அவதிப்படுவது, பொய் பேசுவது கள் குடிப்பது இவையெல்லாம் ஆரம்பத்தில் இன்பமாக இருந்து முடிவில்துன்பமாக முடியும். இவற்றுக்கு இடம் கொடுத்தபிறகுஅகற்றுவதுகடினம்.
ஆத்திசூடி

-இறைவனை மருக்கொழுந்தினால் அர்ச்சனை செய்தால் ஆனந்தகரமான வாழ்க்கை கிடைக்கும். இறைவனை மல்லிகைப் பூவால் அர்ச்சனை செய்தால் எல்லாப் பாவங்களும் விலகும். இறைவனை மலர்களால் அர்ச்சனை செய்தவதைவிட, மாலைகளாகத்தொடுத்துப் பகவானுக்கு அர்ப்பணம் செய்வதுஎண்ணற்ற மடங்கு பலனைத் தரும்.

தோட்டத்து மலர்களைவிட, காட்டுப் பிரதேசத்தில் மலரும் மலர்களைப் பறித்துவந்துஇறைவனை அர்ச்சனை செய்வது மூன்று மடங்கு பலனைத் தரும்.
-அக்கினி புராணம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com