மணியோசை

"பொருநை போற்றுதும்' தொடர் மூலம் டாக்டர் சுதா சேஷய்யன் சுதந்திரப் போராட்ட அனுவங்களைத் தொகுத்து எழுதி வருவது மிகவும் பெருமைக்குரியது..!
மணியோசை


"பொருநை போற்றுதும்' தொடர் மூலம் டாக்டர் சுதா சேஷய்யன் சுதந்திரப் போராட்ட அனுவங்களைத் தொகுத்து எழுதி வருவது மிகவும் பெருமைக்குரியது..!
-ரேவதி சம்பத்குமார், ஈரோடு. 
"தேவியின் திருத்தலங்கள்' தொடரில் ஜி.ஏ.பிரபா எழுதும் அம்மன் கோயில்களின் தல வரலாறு படித்து பாதுகாக்க வேண்டிய பகுதியாகும். 
-லேகா விஷ்ணு, சிறுகளத்தூர்.
"ஆடிக் கூழை நாடிக் குடி!' கட்டுரை மூலம் கேழ்வரகு கூழின் முக்கியத்துவத்தை ரஞ்சனா பால  சுப்ரமணியன் அருமையாக எடுத்துக்காட்டியுள்ளார்.                                                                                                                          
-ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி.
ஆனந்த ஆடிப் பெருக்கின் சிறப்பை எஸ். வெங்கட்ராமன் எடுத்துக் கூறியுள்ள விதம் போற்றத்தக்கது..!
-கே.கிருஷ்ணசாமி, ஆவடி. 
திருவரங்கம் திருத்தலத்தில் ஸ்ரீ நம்பெருமாள் தனது அஷ்ட துணைவியருள் ஒருவராக கருதப்படும் காவிரித்தாயை ஆடிப்பெருக்கு அன்று மணம் புரிவதாக உள்ள ஐதீகம் பலர் அறியாதது. 
-செந்தி. மாரீஸ்வரி, தேனி.
சிவனாகவும் விஷ்ணுவாகவும் வழிபடப்படும் "புவனேஸ்வரம் லிங்கராஜா' திருக்கோயில் பற்றிய விளக்கம் அருமை. பொன்மொழிகள் பகுதி அனைத்தும் வாழ்வில் பின்பற்றி உயர்வடைய மிக்க பயனுள்ளதாக இருக்கிறது.
-அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com