பொன்மொழிகள்!

பொன்மொழிகள்!

சுவாமி கமலாத்மானந்தர் எல்லா உலகங்களும் அழிந்தபோதிலும், இறைவனால் படைக்கப்பட்ட யாவும் அழிந்தபிறகும் அவர் அழியமாட்டார்.

சுவாமி கமலாத்மானந்தர் எல்லா உலகங்களும் அழிந்தபோதிலும், இறைவனால் படைக்கப்பட்ட யாவும் அழிந்தபிறகும் அவர் அழியமாட்டார். அவரே எல்லாவற்றுக்கும் தலைவர்; தனக்கு விருப்பமானதை அவர் செய்வார். அவர் மன்னர்களுக்கெல்லாம் மன்னர்; சர்வ வல்லமை படைத்த பெருந்தெய்வம். அவருடைய சங்கல்பத்தின்படி நடந்துகொள்வதே நமக்கிட்ட பணியாகும்.     
- குருநானக்

ப்நன்மையை அளிக்கும் தாயே! பாகீரதியே! உனது ஜலத்தின் பெருமை சாஸ்திரங்களில் போற்றப்படுகிறது. உனது மகிமையை அறியாத எனது அக்ஞானத்தைக் கருணைகூர்ந்து பொறுத்துக்கொண்டு என்னைக் காப்பாற்றுவாயாக.
-ஆதிசங்கரர், கங்கா ஸ்தோத்திரம்

ப்மாயையின் விளையாட்டுக்கு இருப்பிடமான இதயத்தாமரையில் ஆத்மலிங்கம் இருக்கிறது. நான் அந்த ஆத்மலிங்கத்தை மனதில் நிறுத்தி, தூய உள்ளமும் சிரத்தையுமான ஜலத்தால் அபிஷேகம் செய்கிறேன். அதை சமாதியாகிய புஷ்பங்களால் தினமும், மறுபிறப்பை அகற்றுவதற்காகப் பூஜிக்கிறேன்.
-சிவ மானஸ பூஜா ஸ்தோத்திரம்

ப்வனமாலை, கதை, சார்ங்கம், சங்கு, சக்கரம், நந்தகம் என்ற வாள் ஆகியவற்றைத் தரித்திருப்பவரும், மகாலட்சுமியுடன் கூடியவருமான நாராயணன் நம்மை ரட்சிக்கட்டும்.
-ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம்

ப்யுத்த களத்தில் நாலா பக்கங்களிலிருந்து பாய்ந்து வரும் அம்புகளை எல்லாம் யானை தாங்கிக்கொள்கிறது. அது போன்று ஒருவன் பிறரது அவதூறுகளையும் வசைமொழிகளையும் தாங்கிக்கொள்ள வேண்டும்.
-தம்மபதம்

ப்துறவு நிலையில் உறுதியாக நிலைபெற்றவர்கள், "தீரர்கள்' என்று கருதப்படுகிறார்கள். அவர்கள் துறவு நிலையில் ஏற்படும் இன்பமாகிய அமுதத்தைப் பருகுகிறார்கள்.
-அவதூத கீதை

ப்பண்பும் திறமையும் வாய்ந்தவர்கள் சிறிய தொகையினராக இருந்தாலும், பெரும் சேனைகளையும் அவர்களால் தோற்கடிக்க முடியும்.
-அர்ஜுனன் (மகாபாரதம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com