நான்கு யுகம் கடந்த பாலைவனநாதர்!

"பாலை' என்ற மரமே இத்தலத்தின் தலமரமாகவும், அதுவே ஊர்ப்பெயராகவும், சுவாமி பெயராகவும் அமைந்த பெருமையுடைய தலங்களுள் ஒன்று.
நான்கு யுகம் கடந்த பாலைவனநாதர்!

"பாலை' என்ற மரமே இத்தலத்தின் தலபாலைவனநாதர்!மரமாகவும், அதுவே ஊர்ப்பெயராகவும், சுவாமி பெயராகவும் அமைந்த பெருமையுடைய தலங்களுள் ஒன்று திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில். தேவாரப் பாடல் பெற்ற காவிரிக்குத் தென் கரையில் அமைந்துள்ள 19-ஆவது தலம். 

தலச்சிறப்பு: 
திருமால், பிரம்மன், வசிட்டர், திசைப்பாலகர்கள், தேவர்கள் ஆகியோர் வழிபட்டதலம். தாருகாவனத்து முனிவர்கள் இறைவனைப் புறக்கணித்து அவரை அழிக்க எண்ணி, கொடும் தீய வேள்வியைச் செய்து சிவனின் மீது புலியை ஏவினர். சிவன் அதனைக் கொன்று புலித்தோலை ஆடையாக அணிந்த தலம் இது. 

பாலைவனம், பிரம்மவனம், அரசவனம், புன்னாகவனம் எனப் பல பெயர்கள் இத்தலத்திற்கு உண்டு. திருநல்லூரைச் சேர்ந்த சப்த ஸ்தானங்களில் இத்தலமும் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. 
நான்கு யுகங்களாக பாலத்துறை நாதர் இங்கு கோலோச்சுவதாக ஐதீகம். அதனை நிரூபிப்பது போல், வெவ்வேறு யுகங்களில் பிரதிஷ்டையாகியுள்ள, வசிஷ்ட லிங்கம் (வசிஷ்டர் பூஜித்தது), ராமலிங்கம் (ராமர் பூஜித்தது), அர்ச்சுனலிங்கம் (அர்ச்சுனன் பூஜித்தது) மலையத்துவஜ லிங்கம் (மலையத்துவன் பூஜித்தது) ஆகியவற்றை இவ்வாலயத்தில் தரிசிக்கலாம்.

அப்பர் பெருமான் இத்தலத்தின் 51}ஆவது பதிகத்தில் சூட்சும பஞ்ச அட்சரமாகிய "சிவாய' என்னும் சொல்லைப் பயன்படுத்தி தேவாரத்தை இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலில் சோழர்கள் ஆட்சிக் காலத்திய கல்வெட்டுகள் உள்ளன. இவ்வாலயத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரியதான செங்கற்களால் கட்டப்பட்ட நெற்களஞ்சியம் உள்ளது.

சுவாமியும், அம்பாளும் திருமணக் கோலத்தில் இருந்து அருள்வதால் இது ஒரு திருமண பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. மார்கழி ஆருத்ரா திருநாளன்று நடராஜப் பெருமான் புலித்தோல் அணிந்து பவனி வருவது சிறப்பு. அம்பாள் தனது இடது திருக்கரத்தில் அன்னப்பாத்திரம் ஏந்தியுள்ளது ஓர் அற்புத எழிற்கோலம். இங்கு வழிபட்டால் உணவுக்கு என்றும் குறைவு வராது என்பது ஐதீகம்.

கும்பகோணம் - தஞ்சை சாலையில் பாபநாசம் பேருந்து... நிலையத்திலிருந்து வடகிழக்கே ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. அருள்மிகு தவளவெண்ணகையாள் அம்பாள் உடனுறை அருள்மிகு பாலைவனநாதர் சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா பிப்ரவரி 1}ஆம் தேதி நடைபெறுகிறது. யாகசாலை பூஜைகள் நாளை (ஜனவரி}30) தொடங்குகின்றன.

மேலும் விவரங்களுக்கு: 9894393428.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com