கொள்ளை நோயும் தாவீது ஜெபமும்

மிகக் கொடிய தொற்று நோய் திடீர் மரணத்தைக் கொடுக்கும். இந்நோயைக் "கொள்ளை நோய்' என்பர். மிக வேகமாகப் பரவும். ஆயிரமாயிரம் பேரை மடியச் செய்து பெரும் துன்பத்தைக் கொடுக்கும்.
கொள்ளை நோயும் தாவீது ஜெபமும்


மிகக் கொடிய தொற்று நோய் திடீர் மரணத்தைக் கொடுக்கும். இந்நோயைக் "கொள்ளை நோய்' என்பர். மிக வேகமாகப் பரவும். ஆயிரமாயிரம் பேரை மடியச் செய்து பெரும் துன்பத்தைக் கொடுக்கும்.
வேதாகமத்தில் அவ்வாறு கொள்ளை நோய் பரவிய நிகழ்ச்சி ஒன்று உள்ளது. 
பேரரசன் தாவீது பல போராட்டங்களுக்குப் பிறகு மிக அமைதியாக ஆட்சி செய்து வந்தார். அவர் வீரதீர பராக்கிரமசாலியாய்த் திகழ்ந்தார்.  மக்கள் மிகவும் அமைதியாக வாழ்ந்தனர். 
தாவீது தன் அரசாட்சி மீது தற்பெருமை கொண்டார். உடனே தன் படைத்தலைவனை அழைத்து ""நம் நாட்டில் இளைய வீரர்கள் எத்தனை பேர் உள்ளனர்? திடீர் போர் ஏற்படும் பட்சத்தில் நம் படையில் எவ்வளவு பேர் திரள்வர்?''  என இலக்கம் பார்க்கச் சொன்னார்.  இந்தச் செயல் கர்த்தரை மிகவும் கோபம் அடையச் செய்தது. 
குதிரையே யுத்தத்துக்கு ஆயத்தம் செய்யப்படும். ஜெயமோ கர்த்தரால் ஏற்படும்; மனித ஆற்றலால் அல்ல.  போர் முறையால் அல்ல. வெற்றியை கர்த்தர் தருகிறார் என்பது இறைவன் வாக்கு. 
பேரரசனாகிய தாவீது கடவுளின் வார்த்தைக்கு எதிராக தன் படையின் ஆள் பலம் பார்த்துப் பெருமை கொண்டதால், கர்த்தர் தம் தீர்க்கதரிசியான காத் என்பவரை தாவீதுவிடம் அனுப்பினார். 
தாவீதுவிடம் வந்த தீர்க்க
தரிசி காத் ""என்ன காரியம் செய்தீர்? கர்த்தர் வார்த்தை கேளும். உமக்கு கடவுளின் கோபம் மூன்று தண்டனையை கொண்டு வந்துள்ளது. அதில் ஒன்றை தேர்ந்து எடுத்துக் கொள்ளும். ஒன்று, உம் நாட்டில் ஏழு வருடம் கொடிய பஞ்சம் வரும். இரண்டு, மூன்று மாதம் அன்னியர் உன்னை அடிமைப்படுத்திக் உன் நாட்டை ஆள்வர். மூன்றாவது, மூன்று நாள்களுக்கு உன் நாட்டில் கொடிய கொள்ளை நோய்த் தொற்று வந்து ஆயிரமாயிரம் பேர்கள் மரித்துப் போவார்கள்'' என்றார். 
தாவீது அலறியபடி, ""ஐயோ பாவம் செய்தேன். பஞ்சத்தில் 7 வருடம் விழ வேண்டாம். அன்னியர் என்னை ஆள வேண்டாம்.  மூன்று நாள்கள் கொள்ளை நோயில் விழுவேனாக!'' என்றான். 
உடனே தாவீது நாட்டில் தொற்று நோய் பரவியது. எழுபதாயிரம் பேர்கள் மடிந்து போனார்கள். தாவீது மிகவும் அழுது கர்த்தரிடம் மிக உருக்கமாக ஜெபித்தார் (ஐஐ இராஜா 24.13). உடனே கொள்ளை நோய் பரவல் நின்று போயிற்று. 
தாவீது, தான் செய்த தவறுக்கு மக்கள் தண்டனை ஏற்க வேண்டாம். தன் பாவத்தை மன்னிக்கும் படி வேண்டியதால் கர்த்தர் மன்னித்தருளினார். 
மனிதர்கள் தெய்வத்துக்கு எதிராக பாவம் செய்யும் போது இவ்வாறான தொற்று வருகிறது என்று இறை மக்கள் நம்புகின்றனர்.  
நம் பாவங்களை தெய்வத்திடம் அறிக்கையிடுவோம். தொற்று நோய் முற்றிலும் அகன்று இயேசுவைப் போற்றி வாழ்வோம். 
இறையருள் நம்மோடு..! 

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com