ஜாதகத்தில் ராஜயோக அமைப்பு!

ஸ்ரீ விக்கிரமாதித்ய சந்திரகுப்தனின் அரசவையில் ஆஸ்தான வித்வானாக விளங்கிய ஸ்ரீ வராகமிகிரர் தனது கிரந்தமாகிய "பிருகத் ஜாதகம்' எனும் நூலில் "நாபஸ யோ காத்யாயம்' என்கிற பகுதியில் ராஜயோக பாவங்களைப் பற்றிக்
Weekly horoscope
Weekly horoscope


ஸ்ரீ விக்கிரமாதித்ய சந்திரகுப்தனின் அரசவையில் ஆஸ்தான வித்வானாக விளங்கிய ஸ்ரீ வராகமிகிரர் தனது கிரந்தமாகிய "பிருகத் ஜாதகம்' எனும் நூலில் "நாபஸ யோ காத்யாயம்' என்கிற பகுதியில் ராஜயோக பாவங்களைப் பற்றிக் கூறும் பொழுது, ஒரு ஜாதகரின் 12 பாவங்களில் ராகு, கேது பகவான்கள் நீங்கலாக மற்ற 7 கிரகங்களும், நான்கு வீடுகளில் இருப்பார்களேயானால் அந்த அமைப்பிற்கு "கேதார யோகம்'  என்று பெயரிட்டுள்ளார்.

இந்த ராஜயோக அமைப்பின்படி ஜாதகர் தனது வாழ்வில் விசேட கல்வி அறிவு, கல்வி மூலமாக உத்தியோக ஜீவனம், லக்ஷ்மி கடாக்ஷம், குடும்ப க்ஷேமம், களத்திர புத்திர சுகம், பொன்னாபரணங்கள், நவரத்தின லாபம், நூதன இல்லத்தில் வசித்தல், வாகன வசதி போன்ற சகல செளபாக்கியங்களும் விருத்தி உடையவராக ஆயுள் வரை பரிமளிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிருகத் ஜாதகத்திற்கு விளக்கம் எழுதிய ஸ்ரீ பட்டோத்பவர் யோக அமைப்புகளைப் பற்றிக் கூறும் போது, இந்த நாபஸ யோகப் பலன்களை, எந்த தசா புக்தியாலும் மாற்றி அமைக்க இயலாதென்றும், இந்த ராஜ யோக பலன்கள் நடந்தே தீரும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

"ஜாதகப் பாரிஜாதம்' என்னும் நூலின் ஆசிரியரான ஸ்ரீ கல்யாண வர்மா ஒரு ஜாதகரின் ராஜயோக பாவங்களைப் பற்றி எழுதும் பொழுது, ஒரே ராசியில் பாக்கியாதிபதியான 9-ஆம் அதிபதி, ஜென்ம லக்னாதிபதியுடன் ஒன்றுகூடி இருப்பதோடு இருவருக்கும் அது  நட்பு கிரக ராசியாக அமைந்தால், அந்த அமைப்பிற்கு "தனபாக்கியம்' என்றும் கூறியிருக்கிறார்.

இந்த ராஜயோக அமைப்பின்படி ஜாதகர்  தனது வாழ்வின் நடுப்பகுதியிலிருந்து உத்தியோக உயர்வு, உயர்  அதிகாரிகளால் பாராட்டப்படுதல், ராஜ சன்மானம் (அரசாங்க வெகுமதி) போன்ற விசேட வாய்ப்புகளை அடைவதோடு, பெயர், புகழோடு கூடிய பிரமுகராகவும் விளங்குவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com