பிப்ரவரி 18 முதல் 24ஆம் தேதி வரையிலான வாரப்பலன்கள்.
பிப்ரவரி 18 முதல் 24ஆம் தேதி வரையிலான வாரப்பலன்கள்.

திடீர் தனயோகம் உண்டாகப்போகுது இந்த ராசிக்கு: வாரப் பலன்கள் (ஏப்.1 -7)

12 ராசிகளுக்கான இந்த வாரப்பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

12 ராசிகளுக்கான இந்த வாரப்பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

விவேகம் வேண்டிய காலமிது. மற்றவர்களை நம்பி எந்த ஒரு வேலையையும் ஒப்படைக்கக் கூடாது. எளிதாக முடிகின்ற வேலையும் இழுபறியாகவே நிறைவுறும். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் உண்டாகும்.

உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரிகள் வேலையாட்களை உற்சாகப்படுத்தி, தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். கூட்டாளிகளிடம் சற்று எச்சரிக்கையுடன் பழகவும். விவசாயிகளுக்கு நீண்ட நாள்களாகவே தடைபட்ட சில காரியங்கள் நிறைவு பெறும். கால்நடைகளினால் நல்ல அபிவிருத்தி ஏற்படும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவினால் சில பிரச்னைகள் தீர்வாகிவிடும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். கலைத்துறையினர் உங்களது பணியில் உள்ள சூட்சுமங்களை அறிந்து, அதற்கேற்ப செயல்படுங்கள். பெண்மணிகள் பொறுமை காக்கவும். குடும்ப உறுப்பினர்களின் கலகங்களை சமாளிக்க பழகிக் கொள்ளுங்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். 

மாணவமணிகள்  எண்ணியபடி வாழ்க்கையை சிறப்பாக்கிக் கொள்ள நல்ல எண்ணங்களையும், நல்ல நட்பு வட்டத்தையும் உருவாக்கிக் கொள்ளுங்கள்.
பரிகாரம்: துர்க்கையும், விநாயகரையும் வணங்கவும்.

 அனுகூலமான தினங்கள்:  01, 02. சந்திராஷ்டமம்:  இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

இல்லத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கவும்.  இலக்குகளை அடைய பல திட்டங்களை உருவாக்குவீர்கள். மதிப்பு, மரியாதை, செல்வாக்கு உயரும்.

உத்யோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு, அனைத்தும் எதிர்பார்த்தபடியே நிறைவேறும். மேலதிகாரிகளின் அன்பும், அவரணைப்பும் கிடைக்கும். வியாபாரிகள் பழைய வசூல் பாக்கியை  கொடுத்து விடுவீர்கள். புதிதாக கடன் ஏதும் வாங்காமல் அகலக்கால் வைக்காது, வியாபாரம் பண்ணுவீர்கள். விவசாயிகள் கால்நடைகள் மூலம் லாபமடைவீர்கள். நீர்வரத்து அதிகரித்து மகசூல் பெருகி நல்ல லாபமடைவீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் விருப்பத்தை தொண்டர்களுடன் சேர்ந்து நிறைவேற்றுவீர்கள். பயணங்களின்போது சற்று பாதுகாப்புடன் இருக்கவும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். பொருளாதாரம் மேம்படும். பெண்மணிகளுக்கு உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி, சுபகாரியங்களால் மகிழ்ச்சி என  உற்சாகம் மேலோங்கும். மாணவமணிகளை பெற்றோர்  மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு மேம்படுத்தும். விளையாட்டுத் துறையிலும் திறம்பட ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 01, 03. சந்திராஷ்டமம்: இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

திடீர் தனயோகம் உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் நிகழும். மன அழுத்தம் சிறிது சிறிதாக விலகும். வெளிவிளையாட்டுகளில் பாராட்டும், பரிசும் பெறக்கூடிய சூழல் உருவாகும். ஆன்மிக சிந்தனைகள் மேலோங்கும்.

உத்யோகஸ்தர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மெüனம் காப்பது நலம். பண வரவு திருப்தியாகவே இருக்கும். வியாபாரிகள் கடின உழைப்பால் லாபமடைவீர்கள். இருப்பினும் எவருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போடுவதோ, கடன் வாங்கித் தருவதோ கூடாது. விவசாயிகள் நண்பர்களிடம் ஜாக்கிரதையாகப் பழகுங்கள்.
வேலையாட்களிடம் விசுவாசம் காட்டுங்கள். 

அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரையும் அன்புடன் நடத்துங்கள். தொண்டர்கள் நலத்திட்டத்தில் பங்கு கொள்ளுங்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களின் கூட்டு முயற்சியால் உங்களது திறமைக்குச் சவால்விடும் கதாபாத்திரங்களில் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பெண்மணிகள் ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவர் வீட்டாருடனான அன்பு வெளிப்படும். மழலை வரவால் இல்லத்தில் மகிழ்ச்சி நிறையும். மாணவமணிகள் படிப்பில் நல்ல முன்னேற்றமடைவீர்கள். சீரிய முயற்சி செய்து வெளிநாடு படிப்பை மேற்கொள்வீர்கள்.

பரிகாரம்: சிவ பெருமானை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 02, 03. சந்திராஷ்டமம்: இல்லை.

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

சூழ்நிலைகளில் நல்லதொரு மாற்றம் உருவாகும். இருப்பினும் அளவுக்கு மீறின யோசனைகளினால் சற்று மன உளைச்சல் உருவாகும். எனவே உடலாரோக்கியத்தில் சற்று அக்கறை காட்டுங்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். 

உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களினால் சற்று கலகங்கள் உருவாகும். இருப்பினும் எந்தவொரு சூழ்நிலையிலும், உணர்ச்சிவசப்படாமல் அமைதியாக இருந்து காரியமாற்றுங்கள். வியாபாரிகள் புதுப்புது நுணுக்கங்களால் வியாபாரத்தை மேம்படுத்துவீர்கள். இருப்பினும் அகலக்கால் வைக்காதீர்கள். விவசாயிகள் கால்நடைகளினால் நல்ல லாபமடைவீர்கள். மகசூல் பெருகும்.

அரசியல்வாதிகள் எவரிடமும் வீண் வம்பு, வழக்குகளில் ஈடுபடாமல் நடந்து கொள்ளுங்கள். கலைத்துறையினர் வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகளால்  மகிழ்ச்சியடைவீர்கள். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பெண்மணிகள் கணவருடன் பிரச்னையில்லாமல் சுமுகமாக நட்பைத் தொடருவீர்கள். கணவர் வீட்டாருடன் நேசமாகப் பழகுவீர்கள். 

மாணவமணிகள் கேளிக்கைகளில் விளையாட்டுகளில் நேரத்தைச் செலவிடாதீர்கள். ஆசிரியர் சொற்கேட்டு நடந்து கொள்வது சரியான பாதையை தேர்ந்தெடுக்க உதவும்.

பரிகாரம்: ஸ்ரீ நரசிம்மரை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 01, 04. சந்திராஷ்டமம்:  இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

புராதன கோவில்களுக்குச் சென்று வர நாட்டம் கூடும். உங்கள் எண்ணங்கள் செயல்வடிவம் பெறும். வெளிப்படையாக எவரிடமும் எந்த ரகசியங்களையும் கூறாமல் பல விஷயங்களில் மெளனம் காப்பது மேல்.   

உத்யோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் சிக்கல்கள் உள்ளதால், கவனமுடன் செயல்படவும். வியாபாரிகள் வீண் செலவினங்களை தவிருங்கள். வியாபார நுணுக்கங்களை அனுபவசாலிகளிடம் கற்றுக் கொள்ளுங்கள். விவசாயிகள் நிதி இழப்பை சந்திப்பீர்கள்.  நம்பிக்கையுடன் செயல்பட்டு விவசாயத்தில் ஈடுபட்டு இழந்ததை எடுக்க உழையுங்கள். உழைப்பே மூலதனம். கால்நடைகளை நன்கு பராமரியுங்கள்.

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களிடம் இருந்து நிதி உதவிகள் தாராளமாக வரும். கலைத்துறையினர் திருமண வாழ்க்கையில் சில சிக்கல்களைச் சந்திப்பீர்கள். உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். பெண்மணிகள் அதிக செலவு செய்வதைத் தாங்களாகவே குறைத்து சேமிப்பைக் கூட்டிக் கொள்ளுங்கள். 

குடும்பத்தினரால் கலகங்கள் ஏற்படும். மெüனம் காக்கவும். மாணவமணிகளின் கடின உழைப்பும், கடமை உணர்வும் கவனிக்கப்படும். 
பரிகாரம்: சாஸ்தாவை வணங்குங்கள். அனுகூலமான தினங்கள்: 03, 04. சந்திராஷ்டமம்: 01

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

உங்கள் லட்சியத்தை எப்பாடுபட்டாவது  நிறைவேற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதைப் போக்குவீர்கள். குடும்பத்தில் புதுவரவின் மகிழ்ச்சியில் குதூகலம் நிறையும்.

உத்யோகஸ்தர்கள் பணிகள் அனைத்தையும் வெற்றிகரமாக முடித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் இழுபறி நீடிக்கும். தீட்டிய திட்டங்களினால் வியாபாரம் சிறப்புறும். விவசாயிகள் சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு விவசாயத்தைப் பெருக்கவும். புதிய குத்தகைகளினால் எதிர்பார்த்த லாபம் இராது. 

அரசியல்வாதிகளுக்கு வெளியூர் பயணங்களில் சில கசப்பான அனுபவங்கள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சாதகமாகவே அமையும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். பெண்மணிகள் திட்டமிடும் சுப காரியங்கள் சிறப்பாக நடந்தேறும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளினால் வெற்றி கிடைக்கும். முன்னேறுவீர்கள். மாணவமணிகள் உடலாரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உள்ளரங்கு விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். படிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

பரிகாரம்: பராசக்தியை வணங்குங்கள். அனுகூலமான தினங்கள்: 05, 06. சந்திராஷ்டமம்: 02, 03, 04

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

தந்தை வழி சொத்துகளில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். எதிர்வரும் இடையூறுகளைச் சமாளிப்பீர்கள். உறவினர்களின் விரோதம் தீர்ந்து சுமுகமாகும். குழப்பங்கள் தீர்ந்து தெளிவு பிறக்கும். பொருளாதாரச் சிக்கல்கள் விலகும்.

உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களினால் இருந்து வந்த தொல்லைகள் நீங்கும். வியாபாரிகள் கூட்டாளிகளை சற்று தூரத்திலேயே வையுங்கள். போட்டிகளைச் சமாளித்து திறம்பட சந்தையில் விற்பனை செய்வீர்கள். விவசாயிகள் நவீன உபகரணங்களை வாங்கி புதிய முறை விவசாயத்தை அறிமுகப்படுத்துவீர்கள். மிகுந்த செல்வாக்கு மக்களிடையே ஏற்படும். 

அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளை தலைமையிடம் பெறுவீர்கள். எதிர்க்கட்சியினரையும் அரவணைத்து நன்மதிப்பு பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வெளிநாடு சென்று கலைநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏற்பாடாகும். பயணங்களால் மிகுந்த நன்மை அடைவீர்கள். 

பெண்மணிகள் இல்லறம் இனிதாகவே அமைய பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள். பொருளாதார நிலை சற்று மேம்படும். மாணவமணிகள் படிப்பில் சற்று முன்னேற்றம் காண்பீர்கள். அந்தரங்க விஷயங்களை சக மாணாக்கர்களிடம் கூறாமல் வார்த்தைகளை அளந்து பிரயோகியுங்கள்.

பரிகாரம்: குரு தட்சிணாமூர்த்தியை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 01, 04. சந்திராஷ்டமம்: 05, 06

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பெரியவர்களின் ஆலோசனையைப் பெற்று அதற்கேற்றபடி காரியமாற்றுங்கள். வெற்றி நிச்சயம். அனுகூலமான திருப்பங்கள் உண்டாகி உங்களது முயற்சிகள் அனைத்தும் செயல்வடிவம் பெறும்.

உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டு பெறுவீர்கள். ஊதிய உயர்வினால் சற்று பொருளாதார நெருக்கடிகள் குறையும். வியாபாரிகளுக்கு வங்கி கடன் பெறுவதில் சில சிக்கல்கள் உண்டாகி பிறகு தீர்ந்துவிடும். வியாபாரம் திறம்பட நடந்து லாபமீட்டுவீர்கள். விவசாயிகள் கால்நடைகளின் தீவனங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். மாற்றுப் பயிர்களாலும் நல்லதொரு பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.  

அரசியல்வாதிகள் தொண்டர்களின் அன்பைப் பெறுவீர்கள். இருப்பினும் உட்கட்சிப் பூசலால் சற்று மன உளைச்சல்கள் அதிகரிக்கும். கலைத்துறையினர் பொருளாதாரச் சரிவைச் சரி செய்வீர்கள்.  நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்வீர்கள். 

பெண்மணிகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை. உடல் நலம் பாதிக்கும். மாணவமணிகள் சிறப்பாகப் படித்து தேவையான மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: பழனிமலை ஆண்டவரை வணங்குங்கள். அனுகூலமான தினங்கள்: 02, 06. சந்திராஷ்டமம்: 07.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

இழுபறியான தனவரவு கிடைக்கும். நீண்டநாள் பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் தீர்வு காண்பீர்கள்.  வயிறு சம்பந்தமான உபாதைகளால் சற்று உடல்
நலம் பாதிக்க வாய்ப்புண்டு. கவனம் தேவை.

உத்யோகஸ்தர்களுக்கு பணிகளில் வேலைப்பளு அதிகமாக  இருக்கும். கடின உழைப்பால் சமாளித்து விடுவீர்கள். வியாபாரிகளுக்கு பொறுப்புகளும் அலைச்சல்களும் அதிகரித்து, கடன் சார்ந்த விஷயங்களினால் சில தொந்தரவுகள் ஏற்படும். நிதானத்துடன் செயல்படவும் . விவசாயிகளுக்கு வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். எதிர்பார்த்த பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் உண்டாகும். 

அரசியல்வாதிகளுக்கு சக தொண்டர்களின் ஆதரவு கிடைக்கும்.  பாராட்டுகளும் அங்கீகாரமும் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். எந்தவொரு பிரச்னையிலும் தெளிவு பிறக்கும். பெண்மணிகளுக்கு புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். மாணவமணிகள் நண்பர்களைப் புரிந்து கொள்ளுவீர்கள். பாதியில் நின்ற ஆராய்ச்சிப் படிப்புகளை தொடர்ந்து முடிப்பீர்கள். 

பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடுங்கள். அனு கூலமான தினங்கள்: 04, 07. சந்திராஷ்டமம்: இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

புதிய திறமைகளை வெளிக்கொணர்ந்து பாராட்டுகளை பெறுவீர்கள். குழந்தைகளின் வழியில் ஆதாயம் உண்டாகலாம். புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும்.

உத்யோகஸ்தர்கள் சக பணியாளர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரிகளுக்கு
வியாபாரம் தொடர்பான பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். எண்ணியவைகளை செய்து முடிப்பீர்கள். விவசாயிகளுக்கு அலைச்சல்கள் உண்டாகும். புதியஇலக்குகளை பற்றிய மாறுபட்ட அணுகுமுறைகள் ஏற்படும். 

அரசியல்வாதிகளுடன் தொண்டர்கள் ஒத்துழைப்பார்கள். நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும். கலைத்துறையினரின் செல்வாக்கு மேம்படும். விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். 

பெண்மணிகளுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உருவாகும். மாணவமணிகள் திறமைகளை வெளிப்படுத்தி ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். படிப்பு விஷயத்தில் விழிப்புணர்வு மேம்படும்.

பரிகாரம்: குலதெய்வம்,  பித்ருகளை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 05,07. சந்திராஷ்டமம்  இல்லை


கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகப் பணிகளில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். கடன் சார்ந்த இன்னல்கள் நீங்கும். நாவடக்கம் தேவை.

உத்யோகஸ்தர்கள் மேலதிகாரியின் கெடுபிடிகளைச் சந்திப்பீர்கள். பல பிரச்னைகளில் அமைதி காக்க வேண்டும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் சிரமங்கள் ஏற்படும். அதிக செலவு செய்து கடையை விரிவுபடுத்தாதீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளால் அதிக லாபம் ஏற்படும். புதிய நிலங்களை வாங்கி விளைச்சலை அதிகமாக்கி லாபம் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்க்கட்சியினரை எதிர்த்து பேசி வம்புக்கு வரவழைக்காதீர்கள். கலைத்துறையினர் பிறரிடம் ஒப்பந்தம் செய்யும்போது அதைப்பற்றி நன்கு அறிந்து விசாரித்து கையெழுத்திடவும். பெண்மணிகள் மன தைரியத்தை இழக்காமல் இருங்கள். கஷ்டமான சூழ்நிலைகளில் இருந்து வெளிப்படுவீர்கள். 

மாணவமணிகளுக்கு பழைய முயற்சிகள் கை கொடுக்கும். சீரிய முயற்சி செய்தால் சராசரி மதிப்பெண்களைப் பெற முடியும். வெளி விளையாட்டுகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள்.

பரிகாரம்: சனீஸ்வரருக்கு தீபமேற்றவும். அனுகூலமான தினங்கள் 04, 06. சந்திராஷ்டமம்  இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

தந்தை வழி உறவினர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துகளின் மூலம் லாபம் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

உத்யோகஸ்தர்களுக்கு பொருளாதாரம் சீராகவே இருக்கும். வியாபாரிகள் சக வியாபாரிகளுடன் ஒத்துழைப்பு நல்குவீர்கள். எதிர்காலம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு தொழிலில் இருந்து வந்த மந்தத் தன்மை விலகும். பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளுக்கு வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். உணர்ச்சிவசப்படாமல் சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்து செயல்படவும். கலைத்துறையினருக்கு வெளிநாடு சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். பெண்மணிகளுக்கு நெருங்கியவர்களுடனான உறவில் சிறிது விரிசல் உண்டாகும். பார்த்துப் பழகவும். 

மாணவமணிகள் நண்பர்களை தேர்ந்தெடுத்து பழகுங்கள். அவர்களுடன் சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். 

பரிகாரம்: சிவ பெருமானை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 06, 07. சந்திராஷ்டமம்:  இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com