நூற்றுவர் தலைவன்..

ஆலயத்திலிருந்து வழிபாடு முடித்துத் திரும்பும் இருவர் புலம்பிக் கொண்டு போகிறார்கள்.
நூற்றுவர் தலைவன்..

ஆலயத்திலிருந்து வழிபாடு முடித்துத் திரும்பும் இருவர் புலம்பிக் கொண்டு போகிறார்கள். நாமும்தான் பல வருஷங்களாக மற்றவர்களைப் போல வசதி வாய்ப்புகள் வேண்டி செபித்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் கடவுள் இன்னும் கண்ணைத் திறக்கவே இல்லை. எப்பத்தான் நம் வேண்டுதல்களுக்கு பதில் வருமோ? என்று சலித்தபடியே போகின்றனர்.

இத்தகைய அனுபவம் நம்வாழ்க்கையிலும் நிகழும். அப்படியானால் எத்தகைய செபம் இறைவனுக்கு ஏற்றதாதக அமைந்து, உடனடியாக பதில் கிடைக்கும் என்பதற்கு நூற்றுவர் தலைவனின் வாழ்வில் நடந்ததைச் சற்றே ஆழ்ந்து நோக்கினால் புலப்படும்.

இயேசு கப்பர்நகூமுக்கு வரும்பொழுது நூற்றுவர் தலைவன் ஒருவனின் அன்பான வேலைக்காரன் மரணப்படுக்கையில் வீழ்ந்திருந்தான், அந்த நூற்றுவர் தலைவன் இயேசு மாத்திரமே தன் வேலைக்காரனைக் குணப்படுத்த முடியும் என்று பரிபூரணமாக நம்பி, யூத தலைவர்கள் சீலரை இயேசுவிடம் தன் வேலைக்காரனை குணமாக்க வேண்டுமென வேண்டிக்கொள்ளும்படி அனுப்பினான். அவ்வாறே அவர்களும் வேண்டிக்கொள்ள, இயேசுவும் உடனே அவர்களோடு புறப்பட்டுச் சென்றார்.

இயேசு அந்த நூற்றுவர் தலைவன் வீட்டுக்கு அருகே செல்லும்போது, அந்தத் தலைவன் தன் நண்பர்களை இயேசுவிடம் அனுப்பி, அவர் என் வீட்டிற்குள் பிரவேசிக்க நான் தகுதியற்றவன், அவரிடத்திற்கு வருவதற்கும் என்னைத் தகுதியுள்ளவனாக கருதவில்லை, ஒரு வார்த்தை மட்டும் சொல்லட்டும். அப்பொழுது என் வேலைக்காரன் குணமடைவான் என்று நான் நம்புகிறேன் என்று கூறச் சொன்னதாக இயேசுவிடம் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட இயேசு நூற்றுவர் தலைவனின் ஆழ்ந்த விசுவாசத்தைக் குறித்து வியப்புற்று, இஸ்ரவேலரிடம் கூட இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்." என்றார்.(லாக்.7:9) இயேசுவிடம் அனுப்பப்பட்டவர்கள் வீடு திரும்பி வந்தபோது நூற்றுவர் தலைவனின் வேலைக்காரன் குணமடைந்திருந்தான்.

இயேசு இந்த அளவு வியப்படைவதற்குக் காரணம்தான் என்ன? நூற்றுவர் தலைவனின் ஐயமற்ற ஆழ்ந்த நம்பிக்கை. முழு விசுவாசம், அவரை நான் காண்பதற்கும். அவர் எனனைப் பார்ப்பதற்கும் தான் தகுதியற்றவன் என்ற மனத்தாழ்ச்சி, தான் பதவியும் அதிகாரமும் படைத்தவனாக இருந்தாலும், தன்னை இயேசுவுக்கு முன் ஒரு அற்ப மனிதனாக எண்ணுகிறான். இயேசுவின் வார்த்தைக்கு தன் வேலைக்காரனை குணப்படுத்தும் ஆற்றலும் வல்லமையும் உண்டென்பதையும் முழுமையாக விசுவாசித்தான்.

தன்னைத் தாழ்த்தி இயேசுவின் மீது முழு நம்பிக்கைக் கொண்டு தன் வேலைக்காரனுக்கு சுகத்தைப் பெற்றுக்கொண்டான். நம்முடைய வேண்டுதலும் இப்படியிருந்துவிட்டால் நாமும் எல்லா நன்மைகளும் பெற்று வாழலாம். தன்னைத் தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். என்ற இயேசுவின் பொன்மொழியின்படி வாழ்ந்து உயர்வைப் பெறுவோம்.

- மு.சே.அருள் ராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com