இந்த ராசியினர் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்: வாரப் பலன்கள்

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 
இந்த ராசியினர் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்: வாரப் பலன்கள்

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

முயற்சிகள் இழுபறியாகும். நெருக்கடியை சமாளிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களால் பிரச்னைகள் உருவாக வாய்ப்புள்ளதால், எச்சரிக்கை தேவை. வியாபாரிகள் கடும் போட்டியைச் சந்திக்க நேரிடும். விவசாயிகள் லாபத்தைப் பெறுவர். அரசியல்வாதிகள் பயணங்களால் மேன்மை அடைவீர்கள். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் உருவாகும்.  பொருளாதார அந்தஸ்து கிடைக்கும். பெண்கள் பேச்சில் கவனம் தேவை. உறவினர்கள் வருகை உண்டாகும். மாணவர்கள் கேளிக்கைகளிலும், விளையாட்டுகளிலும் ஈடுபட்டு மகிழ்வார்கள்.
சந்திராஷ்டமம்} இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடத்தில் இடமாற்றம், உத்தியோக மாற்றத்தால் பயன் அதிகமாகும். வியாபாரிகள் புதிய உத்திகளைப் புகுத்தி, விற்பனையை பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். 

அரசியல்வாதிகள் புதிய உத்வேகத்துடன் ஈடுபடுவார்கள். கட்சியில் வாக்குவாதம் நிலவும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கதவைத் தட்டும். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை அதிகமாகும். மாணவர்கள் உடற்பயிற்சி, தியானத்தால் மனத் தெளிவு பிறக்கும்.

சந்திராஷ்டமம்} இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

யோசித்து செயல்பட்டால் நெருக்கடிகளைத் தவிர்க்கலாம்.  அரசு வழியில் சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடிகள்அதிகமாகக் கூடும் என்பதால், மௌனம் சாதிப்பது சிறந்தது. வியாபாரிகள்  கடன் கொடுக்க வேண்டாம். விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்கும். அரசியல்வாதிகள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படவும்.  கலைத்துறையினர் சக கலைஞர்களால் பாராட்டப்படுவர். பெண்களின் இல்லத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். மாணவர்கள்  படிப்பிலும், விளையாட்டிலும் வெற்றி காண்பார்கள்.
சந்திராஷ்டமம்} இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தொழில் நிலையில் சற்று கவனக் குறைவு ஏற்படலாம். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு பெருகும். வேலைப் பளு குறையும். விவசாயிகள் புதிய குத்தகை முயற்சிகளில் இறங்க வேண்டாம்.  அரசியல்வாதிகள் தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும். புதிய பொறுப்புகளில் கவனம் தேவை. கலைத்துறையினர் திறமைகளை நிரூபித்து, விருதுகளைப் பெறுவீர்கள்.  பெண்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.  சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மாணவர்கள் கடுமையாக முயற்சித்து தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவார்கள்.
சந்திராஷ்டமம்} இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

பொறுமையைக் கடைப்பிடியுங்கள். திட்டமிட்ட பணிகள், இடையூறுகள் தோன்றி விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவுடன் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரிகள் போட்டியாளர்களின் தொல்லைக்கு ஆளாவீர்கள். விவசாயிகளுக்கு மிகுந்த அக்கறை தேவை. அரசியல்வாதிகளுக்கு எதிரிகளால் தொல்லை ஏற்படும். கலைத்துறையினர் பிறருடன் அன்பு பாராட்டுவார்கள். பொருளாதாரச் சரிவிலிருந்து மீள்வார்கள். பெண்கள் அநாவசியச் செலவுகளைத் தவிர்த்து, சிக்கனத்துடன் சேமிப்பை பெருக்குவார்கள்  மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு.
சந்திராஷ்டமம்} இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

மனதில் புதிய நம்பிக்கைகள் பளிச்சிடும். உத்தியோகஸ்தர்கள் எதிர்மறையான எண்ணங்களில் இருந்து விடுபடுவார்கள். வியாபாரிகள் மன உறுதியுடன் செயல்பட்டு வருமானத்தைப் பெருக்குவீர்கள். பாக்கி பணம் வந்து சேரும். விவசாயிகளுக்கு பணிகளில் சிறிது தொய்வு ஏற்படும். அரசியல்வாதிகள் தொண்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள்.  கலைத்துறையினர் அனைத்து விஷயங்களிலும் முத்திரை பதிப்பார்கள்.  பெண்களுக்கு உடன்பிறப்புகளிடமிருந்த மனக்கசப்பு நீங்கும். மாணவர்கள் கவனம் சிதறாமல் இருக்கவும்.
சந்திராஷ்டமம்}இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு குறையும்.  வியாபாரிகள் கடும் போட்டியைச் சமாளித்து திறம்பட நடத்துவீர்கள். லாபம் மேம்படும். விவசாயிகள் கையிருப்புப் பொருள்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும். அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய பயணங்களால் லாபம் கிடைக்கும். கலைத்துறையினரின் மரியாதை உயரும். புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.  பெண்கள் ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களின் படிப்பில் நாட்டம் மேலோங்கும்.
சந்திராஷ்டமம்} இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

மகிழ்ச்சி தரும் செய்திகளைக் கேட்பீர்கள். உழைப்பு உயர்ந்த நிலையைத் தேடித் தரும். உத்தியோகஸ்தர்களும் வேலைப் பளு அதிகரித்தாலும்,  செவ்வனே செய்து முடிப்பீர்கள்.  வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.  பொருளாதாரச் சரிவிலிருந்து மீள்வீர்கள். விவசாயிகள் புது நிலங்களைக் குத்தகைக்கு எடுப்பீர்கள்.  கலைத்துறையினரின் திறமை அங்கீகரிக்கப்படும்.  பொருளாதாரம் மேம்படும். பெண்கள் மனம் திறந்து எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டாம். கணவரிடம் ஒற்றுமையோடு இருப்பீர். மாணவர்களுக்கு பெற்றோரின் ஆதரவு பெருகும்.
சந்திராஷ்டமம்} 03.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

நம்பிக்கைகள் பலப்படும். தைரியத்தைக் கைவிடாதீர்கள். புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு மேலிடத்தின் கருணையால் நல்லதொரு சூழல் உருவாகும். வியாபாரிகள் புதிய உத்திகளால் வியாபாரத்தைப் பெருக்குவார்கள். அரசியல்வாதிகள் உள்கட்சிப் பூசலைச் சமாளிப்பார்கள். கலைத்துறையினருக்கு எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும்.  பெண்களுக்கு மனதுக்கு இனிய செய்தி கிடைக்கும். அனைவரிடமும் பரஸ்பரம் பேணுவீர்கள். மாணவர்கள் உடற்பயிற்சி செய்து, ஆத்ம பலத்தைப் பெருக்கி மனச் சோர்வுகளை நீக்குவார்கள். 
சந்திராஷ்டமம்} 4,5.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

விலகிப் போயிருந்த சொந்தங்கள் சேரும். பிள்ளைகளால் பெருமை நேரிடும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடியிலிருந்து விடுபடுவார்கள். சக ஊழியர்களால் நன்மை உண்டாகும். பொருளாதாரம் ஏற்றமடையும். வியாபாரிகள் கடும் போட்டியைச் சமாளிக்கச் சாதுர்யத்துடன் போராடுவீர்கள். வியாபார நுணுக்கங்களை அறிந்து செயல்படுவீர்கள்.  விவசாயிகளின் மகசூல் பெருகும். கலைத்துறையினர்  விவாதத்தால் பிறருடன் விரோதத்தைப் பெரிதாக்குவார்கள். பெண்கள் ஆன்மிகச்சுற்றுலா செல்வர்.  மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆதரவு கிடைக்கும்.
சந்திராஷ்டமம்} 6, 7.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

சிறு விரயங்கள் ஏற்படும். மௌனம் காப்பது மேல். உங்களது கருத்துகளை அடுத்தவர்களிடம் திணிக்க வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பு அதிகமாகும். வியாபாரிகளுக்கு கொடுக்கல்} வாங்கல் விஷயங்களில் அதிக கவனம் தேவை. விவசாயிகள் குத்தகை நிலங்களை சரிவர பயன்படுத்திக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் ஆதரவால், பெயர் பதவி அடைவீர்கள்.  கலைத்துறையினருக்கு புதிய பொறுப்புகள் கிடைத்தாலும் யோசித்து முடிவெடுக்கவும். பெண்கள் ரகசியங்களை வெளிப்படுத்த வேண்டாம். மாணவர்கள் அனுசரித்து நடக்கவும்.
சந்திராஷ்டமம்} 8,9.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

சமூகத்தில் பெயர், புகழ் ஓங்கும். வழக்குகளில் தீர்வு சாதகமாகும். மனிதாபிமானத்தோடு கடமைகளைச் செய்வீர்கள்.  உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களால் நிம்மதி குறையும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். வியாபாரிகள் காலதாமதம் ஏற்பட்டாலும், திட்டமிட்ட பணிகளை விரைந்து முடிப்பீர்கள். விவசாயிகளின் 
உற்பத்திப் பொருள்களால் நல்ல பலன் கிடைக்கும். 
அரசியல்வாதிகளுக்கு நல்ல பலன் உண்டாகும். கலைத்துறையினரின் செயல்கள் மக்களைக் கவரும். பெண்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். மாணவர்கள் யோகா, பிராணாயாமம் செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்} இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com