பிரிந்தோரைச் சேர்க்கும் பெருமான்

சமயக் குரவர்களான திருநாவுக்கரசர்,  திருஞான சம்பந்தர்ஆகியோரால் பாடப் பெற்ற திருத்தலமே திருப்பாதிரி புலியூர் பெரிய நாயகி சமேத பாடலேஸ்வரர் கோவிலாகும்.
பிரிந்தோரைச் சேர்க்கும் பெருமான்

சமயக் குரவர்களான திருநாவுக்கரசர்,  திருஞான சம்பந்தர்ஆகியோரால் பாடப் பெற்ற திருத்தலமே திருப்பாதிரி புலியூர் பெரிய நாயகி சமேத பாடலேஸ்வரர் கோவிலாகும். பாதிரிவனமாக இருந்த இப்பகுதியில் பூத்து குலுங்கிய பல வகை பூக்களை,  இறை வழிபாட்டிற்காகப் பறிக்க விரும்பிய வியாக்ர பாதர். மரங்களில் ஏறி பூக்களைப் பறிக்க இறைவனிடம் வேண்டி புலிக்கால்களைப் பெற்று  "புலிக்கால் முனிவர்' 
என்றே அழைக்கப்பட்டார். 

ஊரும்  புலியூர் ஆனது. சிதம்பரத்துக்கு  "பெரும்பற்றபுலியூர்' என்ற பெயர் உள்ளதால், தற்போது கடலூர் நகரின் ஒரு பகுதியாக உள்ள இவ்வூர் "திருப்பாதிரிபுலியூர்' என வழங்கப்பட்டது. 
இறைவன் பார்வதியுடன் சேர்ந்து சொக்கட்டான் என்னும் பகடைக்காய் விளையாட அம்பிகையே வெற்றி பெற்றாலும் ஈசன்,  தான் வெற்றி பெற்றதாகக் கூறினார். அருகில் இருந்த திருமால்,  உண்மையைச் சொன்னால் மற்றொருவரின் அதிருப்திக்கு ஆளாகும் எனக் கருதி தான் கவனிக்கவில்லை எனக் கூறி விட்டார்.

சினம் கொண்ட பார்வதி,   "இறைவன் கண்களை மூடுவேன். அதையும் மீறி கண்கள் ஒளிர்ந்தால் இறைவன் வென்றவராவார்.   தவறினால் நான் வெற்றி பெற்றதாகவும் ஒப்புக் கொள்ள வேண்டும்' என்று இறைவனின் கண்களை மூடினாள்.  உலகம் இருளில் மூழ்கியது.  அனைத்து இயக்கங்களும் நின்றன.

தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பல யுகங்களுக்கு நீடித்தது. தன் தவறுக்கு வருந்தியபார்வதி,  கரத்தை எடுத்து விட்டு விபரீதத்துக்கு மனம் வருந்தி தன்னைமன்னிக்க ஈசனிடம் வேண்டினாள். 

இறைவனோ, "பூலோகம் சென்று அங்குள்ள 1,008 சிவத் தலங்களைத் தரிசித்து வரும்போது எந்தத் தலத்தில் உனது இடது கண்ணும்,  இடது தோளும் துடிக்கின்றதோ அங்கு உன்னை நான் ஆட் கொள்வேன்' என்றார்.

பார்வதி தேவி பல தலம் தரிசித்து பாதிரிவனமான இந்தத் தலத்துக்கு வந்தபோது, இடது கண்ணும்,  இடது தோளும் துடித்தன. ஆதலால், அன்னைசப்த மாதர்கள் உதவியோடு இங்கு தவம் செய்து.  பூஜித்து இறைவனைஅடைந்தாள்.

பாடலேஸ்வரர் கோயிலில் மூலவரின் கருவறையைச் சுற்றி வரும்போது துர்க்கை கோஷ்டமூர்த்தம் உள்ள இடத்தில் அம்பிகை அரூப வடிவில் தவம் செய்த இடம் தனிச் சந்நிதியாக இருக்கிறது. 

இறைவியின்அரூப நிலையை உணர்த்துவதற்காக இங்கு உருவம் ஏதும் இல்லை.  பீடம் மட்டுமே உள்ளது. இது அருந்தவ நாயகி சந்நிதி என்று வணங்கப்படுகிறது.  இறைவி தவம் செய்து தன் மணாளனை கரம் பற்றிய தலம் என்பதால்,  பிரிந்த தம்பதியினர் வழிபட்டு பலன் பெறுகின்றனர். 

கோயில் அமைப்பு 

கிழக்கு நோக்கிய கோயில் ஏழுநிலை ராஜகோபுரம். பக்கத்தில் சிவகர தீர்த்தமும்உள்ளது.  முன் மண்டபத்தில் பலி பீடம்,  செப்புக் கவசமிட்ட கொடிமரம்,  நந்தியம்பெருமான் உள்ளனர். வெளிப் பிரகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை.  இரண்டாவது பிரகாரத்தில் துவார விநாயகர், துவார சுப்பிரமணியர் கடந்து உள் சுற்றில் சந்திரன், திருநாவுக்கரசர் சந்நிதிகள் உள்ளன. 

திருநாவுக்கரசரை அமர்ந்த நிலையில் இங்கு மட்டுமே தரிசிக்கலாம். அறுபத்து மூவர் பாதிரிமலருடன் காட்சி தரும் கன்னி விநாயகர் வியாக்ரபாதர், அகத்தியர் முதலியோர் பூஜித்த லிங்கங்கள், மீனாட்சி சுந்தரேஸ்வரர் , வள்ளி} தெய்வானை சமேத ஆறுமுகர் எழுந்தருளியுள்ளனர்.

மற்ற சிவத் தலங்களில் பள்ளியறை,  இறைவியின் சந்நிதிக்கு அருகில் இருக்கும்.  இறைவன் இறைவியின் சந்நிதிக்குச் செல்வது வழக்கம். ஆனால் பள்ளியறை இறைவனின் திருச் சந்நிதியில் அமைந்து,  தினமும் இறைவி பள்ளியறைக்கு எழுந்தருள்வது தனிச்சிறப்பாகும்.

மாணிக்கவாசகர் திருப்பாதிரிபுலியூர் பெருமானைத் தரிசிக்கச் செல்லும்போது, கெடில நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. தன்நிலையைக் கூறி பெருமானை நினைக்க,சித்தராகத் தோன்றிய சிவன், மாணிக்கவாசகரைக் கண்களை மூடும்படி கூறி, நதி பாடலவனத்துக்குள் வராமல் திரும்பி திசை மாறி ஓடச்செய்தார்.

கடலில் இருந்து கரையேறிய அப்பர் பாடலேஸ்வரரைத் தரிசித்து "ஈன்றாளுமாயெனக்கெந்தையுமாயுடன்தோன்றினராய்' எனத் தொடங்கும் பதிகம்பாடி திருப்பாதிரிப்புலியூர் இறைவனைத் தொழுதார். 
அப்பர் காலத்துக் கோயிலில் கல்வெட்டுகள் மூலம் 1,100 ஆண்டுகளுக்கு முன்பாகக் கட்டப்பட்ட கோயிலாக உணர முடிகிறது.

கணவன் - மனைவி ஒற்றுமைக்காகப் பிரார்த்தனைசெய்துபலன்பெறும் சிவத்தலமாககடலூர்பாடலீஸ்வரர்திருக்கோயில்உள்ளது. கோயிலில் ஆண்டுதோறும் மகா உத்ஸவம் நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு மே 27-ஆம் தேதி மாரியம்மன் பிடாரியம்மன் வழிபாடாகத் தொடங்கியது.  ஜூன் 4}ஆம் தேதி விநாயகர் வழிபாட்டு தொடங்கி,  13 நாள்கள் பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது .  

முக்கியமான நாள்கள்:
ஜூன் 9-  அதிகார நந்தி சேவை,  தெருவடைச்சான்சப்பரம்.  ஜூன் 11} கைலாசவாகனம் , திருக்கல்யாணம், ஜூன் 13} திருத்தேர்,   ஜூன் 14} நடராஜர் தரிசனமும் தீர்த்தவாரி, ஜூன்  15- தெய்வீக விழா, ஜூன்16 - முருகன்தெப்பம். 17 - இறுதிநாள் நிகழ்ச்சிகள்.
தகவலுக்கு 94443088249 ; 9940731972.
}இரா. இரகுநாதன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com