பொன்மொழிகள்!

உலகத் தொடர்புகள் எல்லாவற்றையும் துறந்து மகான்களுக்குத் தொண்டு செய்பவன் மாயையைக் கடக்கிறான்.
சுவாமி கமலாத்மானந்தர்
சுவாமி கமலாத்மானந்தர்

கடக்க முடியாத மாயையை எவன் கடக்கிறான்?
உலகத் தொடர்புகள் எல்லாவற்றையும் துறந்து மகான்களுக்குத் தொண்டு செய்பவன் மாயையைக் கடக்கிறான். "எனது' என்ற எண்ணம் இல்லாமல் இருப்பவன் எவனோ, அவனே மாயையைக் கடக்கிறான். 

இடைவிடாமல், எல்லையற்ற பகவத் பிரேமபக்தியை அடைந்துவிட்டவன் எவனோ, அவனே மாயையைக் கடக்கிறான். அவன் மற்றவர்களையும் மாயையைக் கடக்கும்படி செய்கிறான்.
 நாரத பக்தி சூத்திரம் 

எந்தப் பணியாள், யஜமானனால் கஷ்டமான காரியத்தில் ஏவப்பட்டு அதை பக்தி சிரத்தையுடன் செய்து முடிக்கிறானோ, அவனைத்தான் "புரு÷ஷோத்தமன்' என்று கூறுகிறார்கள். 

வால்மீகி ராமாயணத்தில் ஸ்ரீராமர் ஹனுமானிடம் கூறியது } 4.1.7
போலி வேடம் தரித்து ஊரை ஏமாற்றிப் பிழைக்கக் கூடாது. அப்படி செய்வதால் உண்டாகும் பாவம் கங்கையில் தலை மூழ்கினாலும் போகாது. பிறருடைய பொருள்களைக் கொள்ளையடிக்க நினைக்கக் கூடாது. ஒருவரிடம் நட்புகொண்டு பின்பு பிரிந்தவுடன், அவரைப் பற்றி பிறரிடம் அவதூறாகப் பேசி சண்டை சச்சரவுகளை வளர்க்கக் கூடாது.
 கடுவெளிச் சித்தர்

தியானத்திற்கு மூலம் குருவின் வடிவம். பூஜைக்கு மூலம் குருவின் திருவடிகள். மந்திரத்திற்கு மூலம் குருவின் திருவாக்கியம். முக்திக்கு மூலம் குருவின் கிருபையாகும்.
ஒரு சுலோகம்

மனம் கிடைக்காத பொருளில் ஆசைகொண்டு துன்பம் அனுபவிக்கிறது.
 ப்ரபோத சுதாகரம் 

பொய்யில்லாமல் உண்மையாக விளங்கும் சர்வேஸ்வரனை உண்மையுடன் வழிபட வேண்டும்.
ஒளவை குறள் 

சீடன், குருவை "இறைவன்' என்றே நினைக்க வேண்டும். குருவானவர் அகல்விளக்கு ஆவார். லிங்கம் திரியாகும். ஞானம் எண்ணெயாகும். பக்திதான் சுடராகும். சீடனுக்கு, "தான் தொண்டன்' என்ற எண்ணம் உதித்து குருவிற்குத் தொண்டு செய்ய வேண்டும்  இதுதான் உயர்ந்த பக்தியின் லட்சணமாகும்.
அல்லம பிரபு (கர்நாடக மாநிலம்)

யார் எல்லா ஆசைகளையும்விட்டு, பற்றின்றி, "நான், எனது' என்ற எண்ணங்கள் இல்லாமல் வாழ்கிறானோ அவன் அமைதியை அடைகிறான்.
பகவத்கீதை 2.71

அடர்த்தியாக இருக்கும் வைக்கோல் போரில் ஊசியைப் போட்டுவிட்டு, பின்பு அதைத் தேடுவது என்பது முடியாத செயல். அது போலவே, பல்வேறு புண்ணியத்தலங்களுக்குச் சென்று இறைவனைத் தேடினால், அவன் கிடைக்கமாட்டான். அவனை நம் உள்ளத்தில்தான் தேட வேண்டும்.
 பாம்பாட்டிச் சித்தர்

தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com