மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது ரிஷபத்துக்கு: உங்களுக்கு (வாரப் பலன்கள்)

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 
மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது ரிஷபத்துக்கு: உங்களுக்கு (வாரப் பலன்கள்)

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவிகள் கிடைக்கும். சுப காரியங்கள் நடைபெறும்.  புத்துணர்ச்சியுடன் செயல்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். 

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் தீவிரமாக இருப்பார்கள். வியாபாரிகளுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். விவசாயிகள் கடுமையாக உழைப்பார்கள். அரசியல்வாதிகள் தீவிரமாகக் கட்சிப் பணியாற்றுவார்கள்.

கலைத்துறையினர் பிறருக்கு உதவிகளைச் செய்வார்கள். பெண்கள் கணவரின் எண்ணங்களைப் புரிந்து நடப்பார்கள். மாணவர்கள் பிறரிடம் நன்முறையில் பழகுவார்கள்.

சந்திராஷ்டமம் -இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

குடும்பத்தில் நிம்மதி மேலோங்கும். தொழிலில் புதிய நுட்பங்களைப் 
புகுத்துவீர்கள். பிறரின் தொந்தரவு குறையும்.  சமுதாயத்தில் நற்பெயர் கூடும்.

உத்தியோகஸ்தர்கள் வெளியூர் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். வியாபாரிகள் கணிசமான லாபத்தைக் காண்பார்கள். 

விவசாயிகள் பாசன வசதிகளில் கவனம் செலுத்துவார்கள்.  அரசியல்வாதிகள் செயலாற்றலை வளர்த்துக் கொள்வார்கள். கலைத்துறையினர் சமய சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்துவார்கள்,

பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி உண்டு. மாணவர்கள் கவனம் சிதறாமல் நன்கு படிப்பார்கள்.

சந்திராஷ்டமம்} இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

வழக்குகளில் சாதகமான நிலை உருவாகும். குழந்தைகளின் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். மனக் குழப்பங்கள் அகலும். உத்தியோகஸ்தர்கள் சுறுசுறுப்புடன் பணியாற்றுவார்கள்.

வியாபாரிகளுக்குப் போட்டிகள் அதிகரிக்கும். விவசாயிகள் புதிய பயிர்களைப் பயிரிடுவார்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களை அனுசரித்து நடப்பார்கள்.

கலைத்துறையினர் புதிய நுட்பங்களைக் கற்றுத் தருவார்கள். பெண்கள் சுப காரியங்களை நடத்தி மகிழ்வார்கள். மாணவர்கள் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம்} இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பிரிந்தவர்கள் குடும்பத்துடன் சேருவார்கள். இழுபறியில் நீடித்த காரியங்கள் விரைவில் முடியும். பெற்றோரின் முடிவுகளை ஏற்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுகளைப் பெறுவார்கள். வியாபாரிகள் மந்தமான சூழ்நிலையில் இருந்து விடுபடுவார்கள். விவசாயிகள் கால்நடைகளால்  வருமானம் உயரக் காண்பார்கள். 

அரசியல்வாதிகள் சமயோஜிதமான முடிவுகளை எடுப்பார்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். மாணவர்கள் ஆசிரியர்களால் பாராட்டப்படுவார்கள்.

சந்திராஷ்டமம்} இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

தொழிலில் முன்னேற சிறப்பான முயற்சிகளை எடுப்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபத்தைக் காண்பீர்கள். உடன்பிறந்தோரிடம் விட்டுக் கொடுத்து செல்லவும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் அதிக பேச்சு கொடுக்க வேண்டாம். வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். விவசாயிகள் பயிர்களால் பிரச்னை ஏற்படாது. 

அரசியல்வாதிகளின் முயற்சிகள் சரியான இலக்கைச் சென்றடையும். கலைத்துறையினருக்கு கலைப்பயணம் ஏற்படும். பெண்கள் சுப காரியங்களை நடத்துவார்கள். மாணவர்கள் பெற்றோரின் பேச்சை கேட்டு நடப்பார்கள்.

சந்திராஷ்டமம்} இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

தொழிலில் பிரச்னை இருக்காது. வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலைமை சீராகவே இருக்கும். இக்கட்டான நிலையில் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வைப் பெறுவார்கள். வியாபாரிகளின் அந்தஸ்து உயரும். 

விவசாயிகளுக்கு உடன் உழைப்பவர்கள் தக்க ஒத்துழைப்பைப் பெறுவார்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்கட்சியினரின் தொல்லை குறையும். கலைத்துறையினர் பாராட்டுகளைப் பெறுவார்கள்.

பெண்கள் பேச்சினால் காரியங்களைப் பூர்த்தி செய்வார்கள். மாணவர்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சந்திராஷ்டமம்} இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும்.  பெயரும், புகழும் உயரத் தொடங்கும். உடல் ஆரோக்கியம், மன வளம் சிறப்பாக இருக்கும்.  நேர்முக, மறைமுகப் போட்டிகள் இருக்காது.  கடன்களைத் திரும்ப அடைப்பீர்கள்.

வியாபாரிகளுக்கான இழுபறி நிலை மாறும். விவசாயிகள் சிறப்பான மகசூலைக் காண்பார்கள். அரசியல்வாதிகள் கட்சிப் பணியாற்றுவார்கள்.

கலைத்துறையினர் தங்களது பணிகளைக் குறித்த காலத்துக்குள் முடிப்பார்கள். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். 

சந்திராஷ்டமம்}11.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு உதவிகள் கிடைக்கும். பெற்றோரும் அனுசரணையாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் எதையும் புரிந்துகொண்டு நடப்பார்கள்.

வியாபாரிகளுக்கு புதிய வியாபாரம் தொடங்க வாய்ப்பு உருவாகும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் ஆதாயம் கிடைக்கும். கலைத்துறையினர் சிறப்பாகப் பணியாற்றுவார்கள்.

பெண்கள் தங்களது கணவரை புரிந்து கொண்டு நடப்பார்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களைக் கேட்டு நடப்பார்கள்.

சந்திராஷ்டமம்}12,13.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

தொழிலில் புதிய இலக்குகளை எட்டுவீர்கள்.  குடும்ப ஒற்றுமையைப் பேணி காப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் தடைபட்டிருந்த காரியங்களைச் செய்து முடிப்பார்கள்.

வியாபாரிகள் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வியாபாரத்தைப் பெருக்குவார்கள். விவசாயிகள் மகசூலில் வளர்ச்சியைக் காண்பீர்கள். அரசியல்வாதிகள் சாதுர்யமாகச் செயல்படுவீர்கள்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களால் மகிழ்ச்சி அடைவார்கள். பெண்களிடம் இருந்த  கருத்துவேறுபாடுகள் குறையும். மாணவர்கள் படிப்பில் சிறப்பிடம் பிடிப்பார்கள்.

சந்திராஷ்டமம்}14,15,16.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தொழிலில் மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள்.  நண்பர்களும் உதவி செய்வார்கள்.  குடும்பத்திலும் மருத்துவச் செலவு குறையும்.  உத்தியோகஸ்தர்களுக்குப் பாராட்டு கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.  விவசாயிகளுக்கு வருவாய் படிப்படியாக உயரும்.  அரசியல்வாதிகள் பிறரிடம் ரகசியங்களைப் பகிர வேண்டாம்.

கலைத்துறையினர் இரட்டிப்பான வருவாயைப் பெறுவார்கள்.  பெண்கள் குடும்பப் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றுவார்கள். மாணவர்கள் பெற்றோருக்குப் பெருமை சேர்ப்பார்கள்.

சந்திராஷ்டமம்}17.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

முக்கிய முடிவுகளை பெற்றோரிடம் ஆலோசித்து எடுப்பீர்கள்.  புதிய நண்பர்கள் அறிமுகம் கிடைக்கும். வருவாய் நல்ல நிலையில் இருக்கும். புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் புதிய வேலைக்கு மாறுவார்கள். வியாபாரிகளுக்கு கடன்கள் வசூலாகும். விவசாயிகள் புதிய கால்நடைகளை வாங்குவார்கள்.. அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும்.

கலைத்துறையினர் திறன்மிக்கவர்களைச் சந்திப்பார்கள். பெண்களுக்கு உறவினர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்படும். மாணவர்கள் நண்பர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பார்கள்.

சந்திராஷ்டமம்} இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

தொழிலை விரிவுபடுத்த முயற்சி செய்வீர்கள்.   உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும்.  வழக்குகளில் சாதகமான திருப்பம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்களால் நன்மை உண்டாகும். வியாபாரிகள் வரவைக் கூட்டுவார்கள்.  விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பார்கள். அரசியல்வாதிகளுக்குத் தொண்டர்களின் பேச்சில் மரியாதை கூடும்.

கலைத்துறையினர் தங்கள் பணிகளில் கவனமாய் இருப்பார்கள்.  பெண்கள் உடல் ஆரோக்கியம், மன வளம் சிறப்பாகவே தொடரும். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம்} இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com