கன்னிக்கு பதவி உயர்வு, உங்களுக்கு: 12 ராசிக்குமான வாரப் பலன்கள்!
By | Published On : 15th September 2023 12:46 PM | Last Updated : 15th September 2023 12:53 PM | அ+அ அ- |

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (செப்டம்பர் 15 - 21 ) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
தொழிலைத் திட்டமிட்டு மேம்படுத்துவீர்கள். அரசு உதவிகள் கிடைக்கும். நோய்கள் தீரும். அவமானங்களிலிருந்து விடுபடுவீர்கள்.
பத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களால் ஏற்படும் குழப்பங்களைச் சமாளிப்பீர்கள்.
வியாரிகள் புதியவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். விவசாயிகள் கோட்டிகளைச் சமாளித்து இலக்கை எட்டுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு பயணங்களால் நன்மை கூடிவரும். கலைத்துறையினர் பிறர் உதவிகளைப் பெறுவார்கள். பெண்கள் சேமிப்பைக் கூட்டிக்கொள்வீர்கள்.
மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்
சந்திராஷ்டமம் செப் 20,21
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
குடும்பத்தில் பாகப் பிரிவினை நடக்கும். தொழில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். எவருக்கும் வாக்கு அளிக்க வேண்டாம். சுப காரியங்கள் நடக்கும்.
உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல்} வாங்கலில் நிலவிய சிக்கல்கள் தீரும். விவசாயிகள் பாசன வசதிகளை மேம்படுத்துவீர்கள்.
அரசியல்வாதிகள் கவனமாக இருக்கவும். கலைத் துறையினர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். பெண்கள் கணவரின் பாராட்டுகளால் மகிழ்ச்சி அடைவார்கள்.
மாணவர்களுக்கு உடல், மன ஆரோக்கியம் மேம்படும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
குடும்பத்துடன் வெளியூர் செல்வீர்கள். சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். பிறருக்கு உதவிகளைச் செய்வீர்கள். உங்கள் பேச்சால் பிறரை கவர்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்து நடப்பீர்கள். வியாபாரிகளின் கௌரவமும், அந்தஸ்தும் உயரத் தொடங்கும். விவசாயிகள் பழைய குத்தகைகளை நல்ல முறையில் முடிப்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு மேலிடம் ஆதரவு அளிக்கும். கலைத் துறையினர் யோசித்து முடிவெடுப்பீர்கள். பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஆர்வம் கூடும். மாணவர்கள் பெற்றோரின் சொல் கேட்டு நடப்பார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
தொழிலில் புதிய வளர்ச்சி எட்ட முடியாமல் போகும். கடன்களை வசூலிப்பீர்கள். பெற்றோரின் உடல்நலம் பாதிக்கும்.
உத்தியோகஸ்தர்கள் கடுமையாக உழைத்தாலும் மேலதிகாரிகள் திருப்தி அடைய மாட்டார்கள். வியாபாரிகள் பணியாளர்களின் அலட்சியப் போக்குக்கு ஆளாவார்கள்.
விவசாயிகள் உபரி வருவாயைப் பெருக்குவார்கள். அரசியல்வாதிகள் உரிய மரியாதையைப் பெறுவார்கள். கலைத் துறையினர் உற்சாகமாய் இருப்பார்கள்.
பெண்கள் அநாவசியச் செலவுகளைச் செய்ய வேண்டாம். மாணவர்கள் பிறரின் விஷயங்களில் தலையிட வேண்டாம்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நல்ல காரியங்களுக்குச் செலவழிப்பீர்கள். சொத்து வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
உத்தியோகஸ்தர்கள் பிறருக்கு பண உதவி செய்வார்கள். வியாபாரிகள் கூடுதல் விழிப்போடு இருக்கவும். விவசாயிகளுக்கு லாபம் உண்டு.
அரசியல்வாதிகள் தங்களுக்கு ஆதரவானவர்களைப் பகைத்துகொள்ள நேரிடும். கலைத்துறையினர் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் சமரசமாகப் போவார்கள்.
மாணவர்கள் ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
செயல்களில் இருந்த தடைகள் விலகும். கடன் தொல்லை குறையும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு பிரயாணங்களால் வருவாய் கூடும். விவசாயிகள் புதிய மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவார்கள்.
அரசியல்வாதிகளின் புகழ் உயரும். கலைத் துறையினர் திறமையால் புகழடைவார்கள். பெண்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்துவார்கள். பெண்கள் ஆடை, ஆபரணங்களை வாங்குவார்கள்.
மாணவர்கள் கடின உழைப்பின் மூலம் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
தொழில் வளர்ச்சி குறித்து முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். உடன்பிறந்தோரும் ஆதரவாக இருக்க மாட்டார்கள். போட்டிகளில் சிறிது நஷ்டமுண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிலவிய தாமதம் குறையும்.
வியாபாரிகளின் முதலீடு மேம்படும். விவசாயிகள் விளைச்சல் முறைகளை மாற்றுவீர்கள். அரசியல்வாதிகள் மேலிடத்துடன் ஆலோசித்து முக்கிய முடிவெடுப்பார்கள். கலைத் துறையினர் பிறருக்கு உதவுவார்கள்.
பெண்களுக்கு உறவினர்களிடம் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு எதிர்பாராத உதவி கிடைக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
தொழிலை விறுவிறுப்பாக நடத்துவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிறையும், கடன் தவணையைக் கட்டி முடிப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் இருக்காது. உத்தியோகஸ்தர்கள் புதிய பயிற்சிகளில் தேர்ச்சி அடைவீர்கள்.
வியாபாரிகள் முழு கவனத்துடன் இருப்பார்கள். விவசாயிகள் கூலித் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள்.
அரசியல்வாதிகள் நிதானத்துடன் இருப்பார்கள். கலைத் துறையினரின் முக்கிய எண்ணங்கள் நிறைவேறும்.
பெண்களுக்கு உற்சாகமான சூழல் நிலவும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
செயல்கள் சுறுசுறுப்பாக நடக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த வாய்தா கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்துவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
வியாபாரிகள் புதிய முதலீட்டு முயற்சியை மறுபரிசீலனை செய்வீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் நெருங்கிய நண்பர்களால் சில இடையூறுகளைச் சந்திப்பார்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வார்கள். பெண்கள் குடும்பப் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். மாணவர்கள் பிறருடன் உஷாராகப் பழகவும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள். பூர்வீகச் சொத்துகளால் வருமானம் கிடைக்கும். தொழிலைச் சீராக நடத்துவீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகச் சூழலுக்கு ஏற்ப செய்முறைகளை மாற்றிக் கொள்வார்கள்.
வியாபாரிகள் கூட்டாளிகளிடம் விழிப்புடன் இருப்பார்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவார்கள்.
அரசியல்வாதிகளுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு வரவேற்பு கிடைக்கும். பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவார்கள்.
மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
சமுதாயத்தில் செல்வாக்கு உயரும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சுப நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் ரகசியங்களை யாரிடமும் பகிர வேண்டாம். வியாபாரிகள் கொடுக்கல் - வாங்கலில் அலட்சியம் வேண்டாம். விவசாயிகள் புதிய குத்தைகளை எடுப்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். கலைத் துறையினரின் முக்கிய எண்ணங்கள் ஈடேறும்.
பெண்களுக்கு புதிய சொத்துகளை வாங்கும் எண்ணம் மேலோங்கும். மாணவர்கள் விளையாட்டில் பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - செப். 15,16, 17.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
உழைப்புக்கேற்ற மரியாதையைப் பெறுவீர்கள். அமைதியாக இருந்து நல்ல பலன்களைப் பெறுவீர்கள். செல்வாக்கை அதிகரிக்க முயற்சிகளை எடுப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் உதவியால் தவறுகளைத் திருத்திக் கொள்வீர்கள். வியாபாரிகள் நல்ல லாபம் காண்பீர்கள். விவசாயிகளுக்கு அபரிதமான லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு உதவுவார்கள்.
கலைத்துறையினருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். பெண்கள் கணவருடன் ஒற்றுமையாக இருப்பார்கள். மாணவர்கள் பெற்றோருடன் இணக்கமாக இருப்பார்கள்.
சந்திராஷ்டமம் - செப் 18, 19.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...