பெண்களுக்கான பிரத்யேக கோயில்

பெண்களுக்கான பிரத்யேக கோயில்
Center-Center-Bangalore

திருச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட பெட்டவாய்த் தலை என்னும் ஊரில் வீற்றிருக்கும் மத்தியார் ஜுனேஸ்வரர் உடனுறை பாலாம்பிகை கோயில், பெண்களுக்கு ஏற்படக் கூடிய உடல்நலக் கோளாறுகளைத் தீர்த்து அருளும் கோயிலாக உள்ளது.

இறைவன் மத்யார்ஜுனேஸ்வரர், இறைவி பெயர் பாலாம்பிகை. பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்யவும், குழந்தை பேறின்மையைத் தீர்க்கவும் மூன்றாம் குலோத்துங்கச் சோழனுக்கு அசரீரி ஒன்று இட்ட கட்டளையின் விளைவுதான் இக்கோயிலும் அதனருகே உள்ள தீர்த்தமும் அமைந்ததாகச் சொல்கிறார்கள். கோயில் கருவறை நிர்மாணம் நிறைவடையும் நேரத்தில் மன்னரின் பிரம்மஹத்தி தோஷம் முழுதும் நீங்கியது. நீண்ட நாள்களாக கிடைக்காதிருந்த குழந்தை பாக்கியமும் கிட்டியது.

"பொற்றாள பூவாய் சித்தர்' என்பவர் இங்கு வாழ்ந்தார். இங்குள்ள பெண்களுக்கு மாதம்தோறும் குறிப்பிட்ட நாள்களுக்கும் மேலாக மாதவிலக்கு ஏற்பட்டுள்ளதாகவும் வேதனையில் வருந்திய பெண்களுக்கு சித்தர் என்னென்னவோ மருந்து தந்தும் பயன் ஏற்படவில்லை. பிறகு இத்தலத்து இறைவியிடம் சித்தர் மனமுருகி முறையிட்டார். அந்த வேண்டுதலுக்குச் செவி சாய்த்தாள் அன்னை. தனக்காக விரதமிருந்து தன்னை வழிபடும் பெண்களின் பிரச்னைகளும் வேதனையும் தீரும்படியாக அருளினாள். மாதாந்திர சிக்கல் மட்டுமல்லாமல், கருப்பைக் கோளாறுகளும் நிவர்த்தியாயின.

பின்னரும் இந்தக் கோயிலில் இறைவனுடன் ஜோதி வடிவில் இணைந்துள்ளார். சித்தரின் உருவம் இறைவனுக்கும், இறைவிக்கும் இடையில் வடபுற தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. இறைவன், இறைவியை வழிபட்ட பின்பு பெண்கள் தங்களுக்கான பிரத்யேக பிரச்னைகளை (குறிப்பிட்ட வயதுக்குப் பிறகும் பருவம் எய்தாத நிலை, மாதவிடாய்க் கோளாறுகள், கருப்பை உபாதைகள், குழந்தை பேறு இல்லாமை போன்றவை) பிரார்த்தனை சீட்டில் எழுதி சித்தரின் திருமேனி உள்ள தூணில் கட்டுகின்றனர்.

இறைவன், இறைவி படத்தை பெற்று 7 முதல் 9 வாரங்களுக்கு வெள்ளிக்கிழமைகள்தோறும் வீட்டில் வைத்து பூஜைகள் செய்து வருகின்றனர்.

திருச்சியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் உள்ளது பேட்டைவாய்த்தலை.

ஏ.எஸ்.கோவிந்தராஜன், கோடம்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com