அறிவோம்...

அறிவோம்...

அறிவோம்...

அமுதம் நிறைந்த குடம் சிவபெருமானால் சிதைக்கப்பட்டதால், அதிலுள்ள அமுதம் நாலா பக்கமும் பரவி, செழுமையாக்கிய தலங்கள்: திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், திருவேரகம், திருப்பாடலவனம்.

}உ.ராமநாதன், நாகர்கோவில்.

ஆதிசங்கரர் கயிலாய மலையில் இருந்து ஐந்து வகை லிங்கங்களை எடுத்துவந்து பிரதிஷ்டை செய்து வழிபட்டார். வழிபட்ட இடங்கள்:

சிருங்கேரி} போக லிங்கம், நேபாளம்} வரலிங்கம், கேதாரம்} முக்தி லிங்கம், காஞ்சி} யோக லிங்கம், சிதம்பரம்} மோட்ச லிங்கம்.

பொதுவாக, அம்பாளுக்கு நான்கு கரங்கள்தான் இருக்கும். ஆனால், தமிழகத்தில் ஐந்து கோயில்களில் மட்டும் அம்பிகை இரு கரங்களுடன் காட்சி தருகிறார். அவை: திருவாரூர்} நீலோத்பலாம்பாள், மதுரை} மீனாட்சி, திருநெல்வேலி} காந்திமதி, திருச்செங்கோடு} கழல்நாயகி, புகலூர்} கருநாதர்குழலி.

}அ.யாழினி பர்வதம், சென்னை}78.

சிவனின் திருக்கோலங்கள் 64 (அஷ்டாஷ்ட மூர்த்தங்கள்) என்கிறார்கள். அதில், பைரவர் என்ற மூர்த்தத்துக்கு மட்டும் 64 மூர்த்த பேதங்கள் உண்டு. எட்டு பைரவ மூர்த்தங்களைக் கூறுகின்றனர். அவை:

அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர். இந்த எட்டு பைரவத் திருமேனிகளைக் கொண்ட தனித்த கோயில் சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் தென் பிரகாரத்தில் உள்ளது.

அதுபோல், திருவண்ணாமலை கோயில் கிழக்கு கோபுர உள்பகுதியில் உள்ள கால பைரவர் கோயிலின் முக மண்டபத்தில், எட்டு பைரவர்களின் சுதை சிற்பங்கள் உள்ளன.

செட்டிநாடு என்று அழைக்கப்படும் காரைக்குடியில் அஷ்ட பைரவர்களுக்கான எட்டு தலங்கள் உள்ளன. திருப்பத்தூர் கோயில் பைரவரின் சிரஸ்தானமாகவும், வைரவன்பட்டி இதய ஸ்தானமாகவும், இலுப்பைக்குடி பாத ஸ்தானமாகவும் விளங்குகிறது.

அண்ணா அன்பழகன், சென்னை} 78.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com