சென்ற ஆண்டில் 93 பத்திரிகையாளர்கள் கொலை

சென்ற 2016-ஆம் ஆண்டில் 93 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சென்ற 2016-ஆம் ஆண்டில் 93 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தக் கூட்டமைப்பின் தலைவர் பிலிப் லீருத் தெரிவித்ததாவது:
வெடிகுண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட செய்தியாளர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் சென்ற 2016-ஆம் ஆண்டில் 93 பத்திரிகையாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 29 பேர் இரு வெவ்வேறு விமான விபத்துகளில் பலியாகினர்.
2015-ஆம் ஆண்டில் பலியான பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 112-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது சென்ற ஆண்டில் பத்திரிகையாளர்களின் பலி எண்ணிக்கை குறைந்துள்ளது.
சென்ற ஆண்டில் இராக்கில் அதிகபட்சமாக 15 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும், ஆப்கானிஸ்தானில் 13 பேரும், மெக்ஸிகோவில் 11 பத்திரிகையாளர்களும் செய்திகள் சேகரிக்கும் பணிகளின் போது உயிரிழந்தனர்.
கொலம்பியாவில் நிகழ்ந்த விமான விபத்தில் 20 பிரேசில் பத்திரிகையாளர்களும், அண்மையில் ரஷியாவில் நிகழ்ந்த ராணுவ விமான விபத்தில் ஒன்பது ரஷிய பத்திரிகையாளர்களும் பலியானதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் பிலிப் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com