அமெரிக்காவை கலக்கிய 'மாத்யூ' புயல் ப்ளோரிடாவை கடந்தது : 800 பேர் பலி!

அமெரிக்காவை கலக்கிய 'மாத்யூ' புயல் ப்ளோரிடாவை கடந்தது : 800 பேர் பலி!

கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவை தாக்கிய புயல்களில் மிகுந்த வலிமை வாய்ந்த மாத்யூ புயலானது,ஜார்ஜியாவுக்கு வடக்கே தெற்கு கரோலினா பகுதிக்கு தென்கிழக்காக நகர்ந்து சென்றது

டேடொனா கடற்கரை (ப்ளோரிடா): கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவை தாக்கிய புயல்களில் மிகுந்த வலிமை வாய்ந்த மாத்யூ புயலானது,ஜார்ஜியாவுக்கு வடக்கே தெற்கு கரோலினா பகுதிக்கு தென்கிழக்காக நகர்ந்து சென்றது. இதன் மூலம் ப்ளோரிடா நேரடியாக பாதிக்கப்படாமல் தப்பித்தது.

கரிபீயன் கடல்பகுதியில் கடந்த பத்து ஆண்டுகளில் உருவான புயல்களில் மிகவும் வலிமை வாய்ந்ததான மாத்யூ புயல் முதலில் ஹைத்தியை தாக்கியது. இந்த தாக்குதலில் 30000 பேர் தங்கள் வீடுகளை இழந்தனர். 800 பேர் பலியாகினர்.  

அங்கிருந்த கரும்பு, வாழை மற்றும் மாமரங்கள் புயலில் வீழ்ந்தன. பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள்  கடுமையான மழை மற்றும் மோசமான காலநிலை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டன.

ஹைத்தியில் ஏற்பட்டுள்ள சேதத்தை முழுமையாக கணக்கிட இன்னும் சில நாட்கள் பிடிக்கும் என்று ஐநா சபை எச்சரித்துள்ளது.

அதன் பின்னர் அங்கிருந்து நகர்ந்து ப்ளோரிடா மற்றும் கரோலினா மாகாணங்களை புயல் தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயலானது, ஜார்ஜியாவுக்கு வடக்கே தெற்கு கரோலினா பகுதிக்கு தென்கிழக்காக நகர்ந்து சென்றது. தற்போது மாத்யூ பயணிக்கும் திசையில் அமைந்துள்ள கடற்கரையோர பகுதிகளில் மணிக்கு 105 மைல் வேகத்தில் காற்று வீசுகிறது. மேலும் 6 முதல் 9 அடிகள் வரை  அலைகள் கரையை தாக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது.

இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கூறும்பொழுது, 'தெற்கு ப்ளோரிடா மாகாணம் புயலின் நேரடி தாக்குதலில் இருந்து தப்பி விட்டாலும், நமக்கு ஆபத்து முழுமையாக நீங்கவில்லை. அலை சீற்றம் மற்றும்  கடும் மழை ஆகியவை இன்னும் மிரட்டிக் கொண்டிருக்கின்றன என்று தெரிவித்தார்.. 

இதன் காரணமாக அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com