அமெரிக்க பவர்பால் குலுக்கலில் 758.7 மில்லியன் டாலர் பரிசு வென்ற பெண்மணி; உடனடியாக வேலையை விட்டார்

அமெரிக்காவில் நடைபெறும் மிகப்பெரிய லாட்டரி சீட்டு முறையான பவர்பால் குலுக்கலில், மேவிஸ் வான்ச்சிக் என்ற 53 வயது பெண்மணி 758.7 மில்லியன் டாலர் பரிசை வென்றுள்ளார்.
அமெரிக்க பவர்பால் குலுக்கலில் 758.7 மில்லியன் டாலர் பரிசு வென்ற பெண்மணி; உடனடியாக வேலையை விட்டார்

நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெறும் மிகப்பெரிய லாட்டரி சீட்டு முறையான பவர்பால் குலுக்கலில், மேவிஸ் வான்ச்சிக் என்ற 53 வயது பெண்மணி 758.7 மில்லியன் டாலர் பரிசை வென்றுள்ளார்.

அமெரிக்காவில் இதுவரை லாட்டரி சீட்டுகள் மூலம் தனி ஒருவர் இவ்வளவு பெரிய பரிசுத் தொகையை வென்றிருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

இதேப்போன்ற பவர்பால் குலுக்கலில் முன்பு 3 பேர் பரிசுத் தொகையை பகிர்ந்து கொண்டுள்ளனர். ஆனால், தற்போதுதான் ஒரு பெண்மணி தனி நபராக இந்த தொகையை பரிசாகப் பெற்றுள்ளார்.

அவருக்கு பரிசுத் தொகை விழுந்திருப்பது குறித்து தகவல் தெரிந்ததும், உடனடியாக அவர் செய்தது என்ன தெரியுமா? மருத்துவ மையத்தில் 32 ஆண்டுகளாகச் செய்து வந்த தனது வேலைக்கு முழுக்குப் போட்டார்.

ஓடி ஓடி எனது காலம் முடிந்துவிடும் என நினைத்தேன். கடவுள், எனது ஓய்வுக் காலத்தை முன்கூட்டியே கொடுத்துவிட்டார் என்கிறார். இந்த பரிசுத் தொகையை எப்படிக் கொண்டாடப்போகிறீர்கள் என்று கேட்டால், நான் எனது படுக்கைக்குள் சென்று ஒளிந்து கொள்ளப்போகிறேன். முழுவதுமாக ஓய்வெடுப்பதே இனி எனது வேலை என்கிறார் மேவிஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com