பிரெக்ஸிட் குறித்து ஐரோப்பிய யூனியன் - பிரிட்டன் இடையே உடன்படிக்கை

ரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்ஸிட் நடவடிக்கை தொடர்பான முக்கிய உடன்படிக்கை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகள் குறித்து பிரஸல்ஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே, ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜங்க்கர்.
பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகள் குறித்து பிரஸல்ஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே, ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜங்க்கர்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்ஸிட் நடவடிக்கை தொடர்பான முக்கிய உடன்படிக்கை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இது குறித்து ஐரோப்பிய ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:
யூனியன் அமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக பிரதமர் தெரசா மே, ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜீன் கிளோட் ஜங்க்கர் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் மூன்று முக்கிய விவகாரங்களில் உடன்படிக்கை ஏற்பட்டது.
வெளியேற்றத்துக்கு இழப்பீடாக 4,500 கோடி யூரோ முதல் 5,500 கோடி யூரோ வரையிலான தொகையை ஐரோப்பிய யூனியனுக்கு பிரிட்டன் அளிக்கும். இறுதித் தொகை பின்னர் முடிவு செய்யப்படும்.
இரண்டாவதாக, ஐரோப்பிய யூனியன் விதிமுறைகளின் கீழ் பிரிட்டனில் தற்போது வசித்து வரும் சுமார் 30 லட்சம் ஐரோப்பியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.
மூன்றாவதாக, அயர்லாந்து - பிரிட்டன் எல்லையில் வர்த்தக சோதனைச் சாவடிகள் மீண்டும் உடனடியாக அமைக்கப்படாது. இவற்றை பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஏற்றுள்ளார்.
ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் கூட்டம் டிசம்பர் 14, 15 தேதிகளில் நடைபெறவுள்ளது. அப்போது பிரிட்டனுடன் வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஐரோப்பிய யூனியனின் முக்கிய வங்கிகள், நிதி அமைப்புகள் தற்போது லண்டனில் தலைமையகம் அமைத்து செயல்பட்டு வருகின்றன. ஆனால் எதிர்காலத்தில் பிரிட்டனின் வரி விதிப்பு போன்ற காரணங்களால் அவை பிரிட்டனைவிட்டு வெளியேறுமா என்பது தெரியவில்லை. அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையில் இந்த விவகாரத்தில் தெளிவு பிறக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த நாற்பதாண்டு காலமாக ஐரோப்பிய யூனியனில் இடம் பெற்றிருந்த பிரிட்டன், அந்த அமைப்பிலிருந்து விலகத் தீர்மானித்தது. கடந்த ஆண்டு பிரிட்டனில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. அந்த அமைப்பில் தொடர வேண்டும் என்ற கொள்கையுடைய அப்போதைய பிரிட்டன் பிரதமர் ஜேம்ஸ் கேமரூனுக்கு இந்த முடிவு அதிர்ச்சி அளித்தது. அவர் தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார். அவருக்குப் பின்னர் தெரசா மே பிரதமர் பொறுப்பேற்றார். ஐரோப்பிய யூனியனில் தொடர வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் அவர் விரும்பினாலும், பொது வாக்கெடுப்பு முடிவையும், அதனை அங்கீகரிக்கும் பிரிட்டன் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் ஏற்று அதற்கான தொடர் நடவடிக்கையில் இறங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com