போர்ச்சுக்கல் நாட்டில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி 62 பேர் பலி

போர்ச்சுக்கல் நாட்டில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி 62 பேர் பலி

போர்ச்சுக்கல் நாட்டில் மூன்று நாள்களாக ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை  62 ஆக அதிகரித்துள்ளது.

லிஸ்பன்: போர்ச்சுக்கல் நாட்டில் மூன்று நாள்களாக ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை  62 ஆக அதிகரித்துள்ளது.

போர்ச்சுக்கல் நாட்டின் பெட்ராகோ மற்றும் கிராண்டே ஆகிய நகரங்களுக்கு மத்தியில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயின் வீரியம் கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், காட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனல் தகிக்கிறது.

காட்டுக்கு நடுவில் செல்லும் சாலைகளில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள் தங்கள் வாகனங்களுடன் எரிந்து சாம்பலாயினர். இதுவரை 62 பேர் தீயில் கருகி உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. தீயில் சிக்கியுள்ளவர்களின் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கொழுந்து விட்டு எரியும் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு 100 தீயணைப்பு வாகனங்களுடன் 600க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதிக்கு அருகில் உள்ள கிராமங்களில் வசிப்போர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட தொடர்ச்சியான காட்டுத் தீயில் 1 லட்சத்துக்கும் அதிகமான ஹெக்டர் நிலங்கள் அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com