யேமனில் காலராவுக்கு 242 பேர் சாவு

யேமனில் காலரா நோய்க்கு கடந்த மூன்று வாரத்தில் மட்டும் 242 பேர் பலியானதாக உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.இதுகுறித்து அந்த அமைப்பு மேலும் கூறியுள்ளதாவது:

யேமனில் காலரா நோய்க்கு கடந்த மூன்று வாரத்தில் மட்டும் 242 பேர் பலியானதாக உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அந்த அமைப்பு மேலும் கூறியுள்ளதாவது:
யேமனில் சுமார் 23,500 பேர் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த நோய் அங்கு பலத்த பேரழிவை ஏற்படுத்தியுள்ளது, கடந்த மூன்று வாரத்தில் மட்டும் இந்த நோயால் 242 பேர் உயிரிழந்துள்ளனர்.
யாரும் எதிர்பாராத வகையில் காலரா தொற்றுநோய் மிக வேகமாக அங்கு பரவி வருகிறது. இந்த நிலை நீடித்தால், இன்னும் ஆறுமாதத்தில் காலரா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,50,000 அதிகரிக்க கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற யேமன் அரசுக்கு எதிராக ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். உள்நாட்டுப் போரில் சுமார் 8,000 பேர் உயிரிழந்ததாகவும், 40,000 பேர் காயமடைந்ததாகவும் ஐ.நா. கூறியுள்ளது. மருந்து, உணவு போன்ற அடிப்படை வசதிகளின்றி சுமார் 30 லட்சம் பேர் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com