பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக இந்தியர் கைது

பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக இந்தியர் ஒருவரை அந்நாட்டு போலீஸார் கைது செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக இந்தியர் ஒருவரை அந்நாட்டு போலீஸார் கைது செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக பாகிஸ்தானின் "எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன்' பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இஸ்லாமாபாதின் நஸிமுதீன் சாலையில் உள்ள எஃப்-8 பகுதியில் கடந்த 19-ஆம் தேதியன்று நடந்து சென்று கொண்டிருந்த நபர் ஒருவரை சோதனை சாவடியில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர் தாம் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, விசா உள்ளிட்ட பயண ஆவணங்களைக் காண்பிக்குமாறு போலீஸார் கேட்டுள்ளனர். ஆனால், அவர் எந்த ஆவணத்தையும் அளிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து, அவரை கைது செய்து, வெளிநாட்டு சட்டத்தின்கீழ் சட்ட விரோதமாக நாட்டுக்குள் நுழைந்து தங்கியிருந்த குற்றச்சாட்டின்கீழ் பாகிஸ்தான் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். அந்த நபர், மும்பையின் ஜோகேஷ்வர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஷேக் நபி அகமது ஆவார் என்று "எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன்' பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் செய்தியாளர்கள் விவரம் கேட்டனர். அதற்கு அங்குள்ள அதிகாரி ஒருவர், தங்களுக்கு இதுபற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்து சர்வதேச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com