லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூடு: குற்றவாளியின் பக்கத்து அறையில் தங்கியிருந்தவர் கடும் அதிர்ச்சி

லாஸ் வேகாஸில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைக் காண வந்த ரசிகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஸ்டீபன் பேட்டாக் (64) தங்கியிருந்த அறைக்கு பக்கத்து அறையில் தங்கியிருந்தவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூடு: குற்றவாளியின் பக்கத்து அறையில் தங்கியிருந்தவர் கடும் அதிர்ச்சி


லாஸ் வேகாஸ்: லாஸ் வேகாஸில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைக் காண வந்த ரசிகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஸ்டீபன் பேட்டாக் (64) தங்கியிருந்த அறைக்கு பக்கத்து அறையில் தங்கியிருந்தவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இசைக் கச்சேரி நிகழ்ச்சியை காண வந்திருந்த பார்வையாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 59 பேர் பலியாகினர். மேலும் 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், லாஸ் வேகாஸை சேர்ந்த ஸ்டீபன் பேட்டாக் (64) என்பது தெரிந்தது. அவர் தங்கியிருந்த அறையில் 10 துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். 

இந்த நிலையில், ஸ்டீபன் பேட்டாக் தங்கியிருந்த ஓட்டலில் பக்கத்து அறையில் பிரையன் ஹோட்ஜ் என்பவர் தங்கியிருந்தார். பேட்டாக், இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி 59 பேரைக் கொன்ற சமயத்தில், பிரையன் ஹோட்ஜ் ஓட்டலில் இல்லை.

36 வயதாகும் ஹோட்ஜ், வெளியே இரவு உணவு சாப்பிட்டுவிட்டு விடுதிக்கு வருவதற்குள் எல்லாமே நடந்து முடிந்துள்ளது. சம்பவப் பகுதியை காவல்துறையினர் சுற்றி வளைத்ததால், இரவு மாண்டாலே பே விடுதிக்குள் செல்ல முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், தான் தங்கியிருந்த அறைக்கு பக்கத்து அறையில்தான் குற்றவாளி பேட்டாக் தங்கியிருக்கிறான். நான் கடந்த சில நாட்களாக, பக்கத்து அறையில் ஏராளமான ஆயுதங்கள், பயங்கர வெடிபொருட்கள் நிறைந்த அறைக்கு பக்கத்தில் தான் உறங்கியிருக்கிறேன் என்பதை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை என்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com