இத்தாலியின் சிசிலி தீவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்: எட்னா எரிமலை வெடிப்பு!

இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள சிசிலி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து மவுண்ட் எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கி உள்ளது.
இத்தாலியின் சிசிலி தீவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்: எட்னா எரிமலை வெடிப்பு!


இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள சிசிலி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து மவுண்ட் எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கி உள்ளது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா இத்தாலியின் சிசிலி தீவில் அமைந்துள்ளது. 

இந்நிலையில், நேற்று திங்கள்கிழமை அங்கு ரிக்டர் அளவுகோலில் 3.3 என்ற அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலம் சூழ்ந்துள்ளது.

எரிமலை வெடிப்பை தொடர்ந்து சிசிலி தீவில் உள்ள கட்டானியா நகரம் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்ததை அடுத்து விமான நிலையம் திங்கள்கிழமை(டிச.24) மூடப்படுவதாக விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே எட்னா எரிமலை வெடிப்பு அடிக்கடி ஏற்படுவதாகவும், கடந்த சில மாதங்களாக எரிமலை வெடிப்பு படிப்படியாக அதிகரித்து வருவதாக இத்தாலி தேசிய புவியியல் மற்றும் எரிமலைக் கழக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த முதற்கட்ட தகவல் ஏதும் இல்லை. 

கடந்த சனிக்கிழமையன்று சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளில் உள்ள கடலோர நகரங்களில் கடலடி எரிமலை வெடிப்புக்கு பிறகு ஏற்பட்ட சுனாமியால் இறந்தவர்கள் எண்ணிக்கை 373 உயர்ந்துள்ள நிலையில், இத்தாலியின் சிசிலி தீவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் மற்றும் எட்னா எரிமலை வெடிப்பு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com