ஊழல் வழக்கு: இஸ்ரேல் பிரதமரை தகுதி நீக்கம் செய்ய காவல்துறை பரிந்துரை

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிரான இரண்டு ஊழல் வழக்குகளில், அவரை தகுதி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்த நாட்டுக் காவல்துறை பரிந்துரைத்துள்ளது.
ஊழல் வழக்கு: இஸ்ரேல் பிரதமரை தகுதி நீக்கம் செய்ய காவல்துறை பரிந்துரை

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிரான இரண்டு ஊழல் வழக்குகளில், அவரை தகுதி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்த நாட்டுக் காவல்துறை பரிந்துரைத்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
தனக்கு சாதமான செய்திகளை வெளியிடுவதற்காக இஸ்ரேலின் யெடியட் அஹாரோனாட் என்ற நாளிதழுக்கு ரகசியமாக லஞ்சம் கொடுத்தது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது ஆகிய இரு குற்றச்சாட்டுகள் அதிபர் நெதன்யாகு மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளை கடந்த 14 மாதங்களாக விசாரித்து வந்த காவல்துறை, நெதன்யாகு மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் போதிய ஆதாரங்களைத் திரட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த வழக்குகளில் நெதன்யாகுவை தகுதி நீக்கம் செய்யலாம் என்று காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் அவர் 3 லட்சம் டாலர்கள் வரை (சுமார் ரூ.2 கோடி) லஞ்சமாகப் பெற்றதாக காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டை ஏற்று பதவி விலக, பிரதமர் நெதன்யாகு மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''எங்களது கட்சிக் கூட்டணி பலமாக உள்ளது. பதவியை ராஜிநாமா செய்து மீண்டும் தேர்தலைச் சந்திக்க நானோ, கூட்டணிக் கட்சிகளை தயாராக இல்லை'' என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com