தொழிலாளர் கொள்கைகளை எதிர்த்து தென் கொரியாவில் நாடு தழுவிய வேலைநிறுத்தம்

தென் கொரிய அரசு அமல்படுத்தியுள்ள தொழிலாளர் நலக் கொள்கைகளால் பெரும் பொருளாதார இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதாக கூறி தென்கொரியாவில்


தென் கொரிய அரசு அமல்படுத்தியுள்ள தொழிலாளர் நலக் கொள்கைகளால் பெரும் பொருளாதார இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதாக கூறி தென்கொரியாவில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நாடு தழுவிய அரைநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். 
கொரிய கூட்டமைப்பு தொழிற் சங்கங்கள் (கேசிடியூ) சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் வாகனத் தயாரிப்பு நிறுவன தொழிற்சாலைகளில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. 
இதுதவிர சியோல் உள்ளிட்ட 13 நகரங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்ற பேரணியும் நடைபெற்றது. 
இதுகுறித்து அந்நாட்டு செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல்: 
தலைநகரான சியோலில் 10 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான பேரணியில் அரசின் கொள்கைகளை எதிர்த்தும், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் படம் பொறித்த சிவப்பு நிற பட்டையை தலையில் அணிந்தும், அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் சென்றனர்.
பேரணியில் நூற்றுக்கணக்கான கலவரத் தடுப்பு போலீஸாரும் உடன் சென்றனர். 
நாடு முழுவதும் மொத்தம் 1 லட்சத்து 60 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திலும், பேரணியிலும் பங்கேற்றதாக கேசிடியூ தெரிவித்தது. 
வேலை நிறுத்தத்திற்கான காரணம்: கொரியாவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அதிகபட்சமாக வாரத்துக்கு 52 மணி நேரம் மட்டுமே பணி வழங்கப்படும் என்றும், பணிக்கு ஏற்ப அனுசரித்துப் பணி புரியுமாறு அரசு தெரிவித்ததை தொழிலாளர்கள் ஏற்கவில்லை. 
மேலும், அதிபர் மூன் ஜே-இன் தலைமையிலான அரசு தேர்தல் சமயத்தில் அறிவித்தபடி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்தப்பட்ச ஊதியமான 7,530 வான் (சுமார் ரூ.474) தொகையை 10 ஆயிரம் வான் (சுமார் ரூ.630) ஆகவும் இத்தொகையை 2020ஆம் ஆண்டுக்குள் வழங்குவதாகவும் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இக்கோரிக்கையை நிறைவேற்றாமல் அரசு தவிர்த்து வந்தது. 
உலகளவில் 11வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இருந்தும், பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்தமான வளர்ச்சி, வேலைவாய்ப்பின்மை, தொடர்ந்து குறைந்து வந்த வருவாய் ஆகிய காரணங்களால் வளர்ச்சி விகிதம் குறைந்து போனது. 
இக்காரணங்களால், தென் கொரியாவின் வளர்ச்சி விகிதம் 52 சதவீதத்தில் இருந்து ஐந்தே வாரங்களில் 13 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்ததாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com