ரோஹிங்கயா விவகாரம்: 5 மியான்மர் ராணுவ அதிகாரிகளுக்கு ஆஸ்திரேலியா தடை

மியான்மரில் சிறுபான்மை ரோஹிங்கயா முஸ்லிம் இனத்தவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, அந்த நாட்டு ராணுவ உயரதிகாரிகள் 5 பேர் மீது
ரோஹிங்கயா விவகாரம்: 5 மியான்மர் ராணுவ அதிகாரிகளுக்கு ஆஸ்திரேலியா தடை


மியான்மரில் சிறுபான்மை ரோஹிங்கயா முஸ்லிம் இனத்தவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, அந்த நாட்டு ராணுவ உயரதிகாரிகள் 5 பேர் மீது ஆஸ்திரேலியா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் மேரிúஸ பெய்ன்  செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில், ரோஹிங்கயா சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, அந்த நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த 5 உயரதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது.
ஆங் கியாவ்ஸா, மவுங் மவுங் சோ, ஆங் ஆங், தான் ஊ, கின் மாங் சோ ஆகிய அந்த ஐவரும், ரோஹிங்கயாக்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட சிறப்புப் படைப் பிரிவுகளை வழி நடத்தியவர்கள் என்றார் அவர்.
இந்தப் பொருளாதாரத் தடை மூலம், அந்த 5 அதிகாரிகளுக்கு ஆஸ்திரேலியாவில் சொத்துக்கள் இருந்தால் அவை முடக்கப்படும். மேலும், அவர்கள் ஆஸ்திரேலியா வருவதற்கும் அனுமதி மறுக்கப்படும்.
ஏற்கெனவே, ரோஹிங்கயாக்கள் மீதான வன்முறை தொடர்பாக மியான்மர் ராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை பொருளாதாரத் தடை விதித்துள்ளது நினைவுகூரத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com