கஷோகி படுகொலை குறித்து நம்பத் தகுந்த விசாரணை தேவை

செய்தியாளர் கஷோகி படுகொலை குறித்து நம்பகத் தன்மை வாய்ந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
கஷோகி படுகொலை குறித்து நம்பத் தகுந்த விசாரணை தேவை

செய்தியாளர் கஷோகி படுகொலை குறித்து நம்பகத் தன்மை வாய்ந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கத்தார் தலைநகர் தோஹாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் பேசியதாவது: இஸ்தான்புலில் உள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில், செய்தியாளர் கஷோகி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக நம்பகத் தன்மை வாய்ந்த விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அந்தப் படுகொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதும் மிகவும் அவசியம் ஆகும்.
இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களில் வெளியாகும் தகவல்களைத் தவிர, நம்பகத் தன்மை வாய்ந்த வேறு எந்த இடத்திலிருந்தும் தகவல்கள் வெளியாகவில்லை என்றார் அவர்.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜமால் கஷோகி, சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து தப்பி அமெரிக்காவில் வசித்து வந்தார். அங்கு வெளியாகும் "வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழில் கட்டுரைகள் எழுதி வந்த அவர், சவூதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.
இந்தச் சூழலில், துருக்கி நாட்டுப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய அவருக்கு, சில ஆவணங்கள் தேவைப்பட்டன. அதனைப் பெறுவதற்காக அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் தேதி சென்றார். ஆனால், அதன் பிறகு அவரைக் காணவில்லை.
தூதரகத்துக்குள் அவரை சவூதி அனுப்பிய ஆட்கள் கொன்று விட்டதாக துருக்கி குற்றம் சாட்டியது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ஆரம்பத்தில் மறுத்து வந்த சவூதி அரேபியா, 18 நாள்களுக்குப் பிறகு தங்களது துணைத் தூதரகத்தில் செய்தியாளர் கஷோகி கொல்லப்பட்டதை  ஒப்புக் கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com