ஆயுத விற்பனை: ஆம்னெஸ்டி கோரிக்கை

யேமனில் உள்நாட்டுச் சண்டையில் ஈடுபட்டு வரும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணிப் படைகளுக்கு மேலைநாடுகள்


யேமனில் உள்நாட்டுச் சண்டையில் ஈடுபட்டு வரும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணிப் படைகளுக்கு மேலைநாடுகள் ஆயுதங்களை விற்பனை செய்யக் கூடாது என்று ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் அந்த அமைப்பின் ஆயுத கட்டுப்பாடு, மனித உரிமைகள் பிரிவு ஆய்வாளர் பேட்ரிக் வில்கன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
ஆயுத பரவலை கட்டுப்படுத்தப்படுவது அவசியமாகும். ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு படையினர், மனித உரிமைகள் மீறலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். யேமனில் உள்ள பொது மக்களுக்கு அவர்களால் மிகப்பெரிய ஆபத்து உருவாகியுள்ளது.
ஆதலால் சவூதி அரேபியா தலைமையிலஹன கூட்டணி படைகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை மேலைநாடுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அந்த ஆயுதங்கள் அனைத்தும், அல்-காய்தா மற்றும் ஐஎஸ் பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
அப்போது, பயங்கரவாதிகளின் கைகளில் மேலைநாடுகளின் ஆயுதங்கள் சிக்குவது தொடர்பாக அரேபிய பத்திரிகையாளர்கள் வெளியிட்ட செய்திகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
யேமனில் அதிபர் தலைமையிலான படைகளுக்கும், ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் ஆதரவு படைகளுக்கு சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகள் தலைமையிலான கூட்டணி படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com