ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

ஈரானில் தற்கொலைப்படை தாக்குதல்: 20 வீரர்கள் பலி

ஈரான் நாட்டில் புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் அந்நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் 20 பேர்

Updated On :14 பிப்ரவரி 2019, 2:46 am IST


ஈரான் நாட்டில் புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் அந்நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் 20 பேர் பலியாகினர்.
ஈரானின் பலுசிஸ்தான் மாகாணத்திலுள்ள ஷனாலியில் பேருந்து ஒன்றில் இஸ்லாமிய புரட்சிகர படைப்பிரிவு வீரர்கள் புதன்கிழமை சென்று கொண்டிருந்தனர். அப்போது பேருந்தை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 20 வீரர்கள் பலியாகினர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. குண்டுவெடிப்பு நடைபெற்ற பகுதி, பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ளது. அது ஓபியம் போதைப் பொருள் கடத்தல்காரர்களின் நடமாட்டம் அதிகமுள்ள இடமாகும்.
 அங்கு ஈரானிய பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், பலுசிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெறுவது வழக்கமாகும். இதனால் தற்கொலைப்படை தாக்குதலை பலுசிஸ்தான் பிரிவினைவாதிகள் நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.