அமெரிக்க, மெக்ஸிகோ எல்லை மூடப்படும்: டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்கா, மெக்ஸிகோ இடையிலான எல்லை மீண்டும் மூடப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
US-Mexico border
US-Mexico border

அமெரிக்கா, மெக்ஸிகோ இடையிலான எல்லை மீண்டும் மூடப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

மெக்ஸிகோவைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவின் தெற்கு பகுதிகளில் அதிகளவில் குடியேறுவது தொடர்ந்து அதிகரித்து வருவதால், அடுத்த வாரத்துக்குள் எல்லைப் பகுதியை மீண்டும் மூட நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், அமெரிக்காவில் மிகவும் மலிவான சட்டதிட்டங்கள் அமலில் உள்ளது. அமெரிக்காவின் இடவசதி மிகவும் குறைந்து வருகிறது. எனவே இங்கு மேலும் மக்கள் குடியேறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே மெக்ஸிகோவில் இருந்து இங்கு குடியேறுபவர்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com