சீனாவுக்கான அமெரிக்க தூதர் திபெத் பயணம்

சீனாவுக்கான அமெரிக்க தூதர் டெரி பிரான்ஸ்டாட் முதல் முறையாக திபெத்துக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

சீனாவுக்கான அமெரிக்க தூதர் டெரி பிரான்ஸ்டாட் முதல் முறையாக திபெத்துக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
அமெரிக்க தூதராக பணியாற்றிய மேக்ஸ் பேக்கஸ் கடந்த 2015-ஆம் ஆண்டில்   திபெத் சென்றிருந்தார். அதன்பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து சீனாவுக்கான அமெரிக்க தூதர் டெரி பிரான்ஸ்டாட் தற்போதுதான் திபெத்துக்கு பயணமாகியுள்ளார்.
கின்காய் மாகாணம் மற்றும் அதையொட்டிய திபெத் தன்னாட்சிப் பகுதிகளில் கடந்த வாரமாக சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, அவர் உள்ளூர் தலைவர்களை சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பின்போது, மத சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் திபெத்தின் காலாசாரம் மற்றும் மொழி ஆகியவற்றை பாதுகாப்பது குறித்த தங்களது நீண்ட கால கவலைகளை உள்ளூர் தலைவர்கள் அமெரிக்க தூதருடன் பகிர்ந்து கொண்டனர் என்று  மின்னஞ்சலில் அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com