'புதிய' இந்திய அரசுடன் 'பேச்சுவார்த்தை' நடத்த தயார்: பாக். வெளியுறவுத்துறை அமைச்சர்

'புதிய' இந்திய அரசுடன் 'பேச்சுவார்த்தை' நடத்த தயார்: பாக். வெளியுறவுத்துறை அமைச்சர்

புதிதாக அமைந்துள்ள இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். 

புதிதாக அமைந்துள்ள இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹமுத் குரேஷி தெரிவித்தார். இதுதொடர்பாக பாகிஸ்தானின் முதல்தான் நகரில் சனிக்கிழமை நடந்த இஃப்தார் விருந்தின் போது அவர் கூறியதாவது:

இந்தியாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசுடன், இரு நாடுகளுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அரசு தயாராக உள்ளது. எனவே இரு நாடுகளும் இணைந்து அமர்ந்து பேசி அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்றார்.

முன்னதாக, 17-ஆவது மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முந்தைய தினம் ஷாங்காய் மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்-ஐ சந்தித்த பாக். வெளியுறவத்துறை அமைச்சர் குரேஷி, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை விரைவில் சுமூகமாக நடைபெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com