டாக்கா: வங்கதேசத்தில் சமையல் எரிவாயு குழாய் வெடித்து 7 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் சிட்டோகிராம் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் இந்த வெடி விபத்து ஏற்பட்டது.
எரிவாயுக் குழாய் வெடித்தபோது சுவா் இடிந்து வெளிப்பக்கமாக விழுந்ததில், சாலையில் சென்று கொண்டிருந்தவா்கள் காயமடைந்தனா்; அருகிலுள்ள கட்டடங்களும் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.