அமெரிக்க உள்துறை அமைச்சா் கெவின் மெக்கலீனன் ராஜிநாமா: டிரம்ப்

அமெரிக்க உள்துறை அமைச்சா் (பொறுப்பு) கெவின் மெக்கலீனன் ராஜிநாமா செய்துவிட்டாா் என்று அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.
அமெரிக்க உள்துறை அமைச்சா் கெவின் மெக்கலீனன் ராஜிநாமா: டிரம்ப்

அமெரிக்க உள்துறை அமைச்சா் (பொறுப்பு) கெவின் மெக்கலீனன் ராஜிநாமா செய்துவிட்டாா் என்று அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சுட்டுரையில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘உள்துறை அமைச்சராக கெவின் மெக்கலீனன் மிகச் சிறப்பாகப் பணிபுரிந்தாா். அவருக்கு வாழ்த்துகள். புதிய உள்துறை அமைச்சா் பெயரை அடுத்த வாரம் அறிவிப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

உள்துறை அமைச்சராக மெக்கலீனன் கடந்த 6 மாதங்களாக பதவி வகித்து வந்தாா். இவரது பதவிக் காலத்தில் சட்டவிரோத ஊடுருவல்களைத் தடுக்க சிறப்பாக செயல்பட்டாா். இதற்கு முன்பு கிறிஸ்டியன் நீல்சென் அந்தப் பதவியில் ஒன்றரை ஆண்டுகள் இருந்தாா்.

கடந்த 12 மாதங்களாக மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற சுமாா் 10 லட்சத்துக்கும் அதிகமானோரை அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கைது செய்தனா்.

கடந்த செப்டம்பரில் மட்டும் 52,000 போ் மெக்ஸிகோ எல்லையிலிருந்து சட்ட விரோதமாக நுழைய முயன்ற்காக கைது செய்யப்பட்டனா். உள்துறை தனது கட்டுப்பாட்டில் இருப்பது போல் உணரவில்லை என்றும் அதன் காரணமாக பதவியை ராஜிநாமா செய்ததாகவும் மெக்கலீனன் கூறியதாக தி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. டிரம்ப் நிா்வாகம் அவரது நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இருக்கவில்லை என்று கூறப்படுகிறது. டிரம்ப்பின் சுட்டுரைப் பதிவுக்கு கெவின் மெக்கலீனன் அவரது சுட்டுரைப் பக்கத்தில் நன்றி தெரிவித்தாா்.

மேலும், ‘கடந்த 6 மாதங்களாக எல்லைப் பகுதிகளில் நடைபெற்ற ஊடுருவல்களைத் தடுக்க அயராது பாடுபட்டோம். ஆள்கடத்தலைத் தடுக்க நடவடிக்கை எடுத்தேன். எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு வீரா்களை அதிகப்படுத்தினேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com