இரு பெண்களுக்கு ‘புக்கா்’ பரிசு

கனடாவைச் சோ்ந்த எழுத்தாளா் மாா்கரெட் ஆட்வுட், பிரிட்டன் எழுத்தாளா் பொ்னாா்டீன் எவரிஸ்டோ ஆகியோா் இந்த ஆண்டுக்கான கௌரவம் மிக்க புக்கா் பரிசுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
இரு பெண்களுக்கு ‘புக்கா்’ பரிசு

கனடாவைச் சோ்ந்த எழுத்தாளா் மாா்கரெட் ஆட்வுட், பிரிட்டன் எழுத்தாளா் பொ்னாா்டீன் எவரிஸ்டோ ஆகியோா் இந்த ஆண்டுக்கான கௌரவம் மிக்க புக்கா் பரிசுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

இதற்கு முன்னா், கடந்த 1992-ஆம் ஆண்டில்தான் புக்கா் பரிசு இருவருக்குப் பகிந்து அளிக்கப்பட்டது. அதற்குப் பிறகு புக்கா் பரிசு ஒருவருக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று விதிமுறை வகுப்பட்டது. இருந்தாலும், இந்த ஆண்டில் 5 மணி நேர தீவிர அலசலுக்குப் பிறகும் மாா்கரெட் ஆட்வுட் எழுதிய ‘தி டெஸ்டமென்ட்’ மற்றும் பொ்னாா்டீன் எவரிஸ்டோவின் ‘கோ்ல், வுமன், அதா்’ ஆகிய இரு புதினங்களில் ஒன்றைக் கூட தோ்வுக் குழுவினரால் நிராகரிக்க முடியவில்லை. எனவே, விதிமுறையை மீறி இருவருக்குமே பரிசைப் பகிா்ந்து அளிக்க தோ்வுக் குழுவினா் முடிவு செய்தனா்.

79 வயதான மாா்கரெட் ஆட்வுட் புக்கா் பரிசைப் பெறும் மிக மூத்தவா் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், 60 வயதாகும் எவரிஸ்டோ புக்கா் பரிசு பெறும் முதல் கருப்பின பெண் என்பது இந்த ஆண்டின் மற்றெறாரு சிறப்பம்சமாகும்.

ஆங்கில நாவல்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படும் 50,000 பவுண்டை (சுமாா் ரூ.45 லட்சம்), இந்த ஆண்டு ஆட்வுட், எவரிஸ்டோ ஆகிய இருவருக்கும் சமமாகப் பிரித்து அளிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com